மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 28 நவ 2020

இந்திய ஆண்கள் கோழைகள்: மந்த்ரா பேடி

இந்திய ஆண்கள் கோழைகள்: மந்த்ரா பேடி

‘சமூக வலைதளங்களில் என்னைக் கிண்டல் செய்வதன் மூலம் இந்திய ஆண்கள் கோழைகள் என்று தெரிந்து கொண்டேன்’ என்று கூறியுள்ளார் நடிகை மந்த்ரா பேடி.

பாலிவுட்டில் இருபது வயதிலிருந்தே நடித்து வருபவர் மந்த்ரா பேடி. இதுவரை 20 படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் அனைத்துப் படங்களும் அவருக்கு வெற்றிப் படமாக அமைந்தது. 2003ஆம் ஆண்டு உலகக் கோப்பை மற்றும் ஐபிஎல் தொடர்களில் தொகுப்பாளினியாக கவனம் பெற்றார். இதையடுத்து தமிழில் 2004ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான ‘மன்மதன்’ படத்தில் டாக்டராக நடித்தார். தற்போது டிவி ரியாலிட்டி ஷோக்களை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் எம்டிவி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட அவர், “நிறைய ஆண்கள், பெண்களை ‘இவள் இப்படித்தான் என்று முடிவெடுத்து விடுவார்கள். அதை எதிர்கொள்வது என்பது கடினம். நானும் அதை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால், அதை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றே தோன்றியது. இந்தச் சமூகமே டிஜிட்டல் மயமாக மாறிவிட்டது. அதனால் சமூக வலைதளங்களில் பெண்களை அதிகம் கேலி செய்கின்றனர். நானும் இது போல் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறேன். இதிலிருந்து இந்திய ஆண்கள் கோழைகள் என்று தெரிந்து கொண்டேன்” என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசியுள்ள அவர், “பெண்ணாக இருப்பதாலும், உடல் அமைப்பை வைத்தும் கிண்டல் செய்கிறார்கள். பொதுவாக, நான் இத்தகைய கருத்துகளின் மீது கவனம் செலுத்துவதில்லை. ஆனால், நான் அதைப் புறக்கணிக்க விரும்பினாலும், சில நேரங்களில் இது போன்ற கருத்துகள் குறிப்பாக அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளைப் பார்க்கும்போது, குழப்பமாகவும் அதேசமயத்தில் ஒரு பெரிய தாக்குதலுக்கு ஆளாவது போலவும் உணர்கிறேன். இதுபோன்ற கருத்துகள் அவர்களது வளர்ச்சியைத் தடுத்து, பெண்களை ஏழ்மை நிலையில் நான்கு சுவருக்குள்ளையே பூட்டி வைத்து விடும். இதை ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என்று தன் எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ஞாயிறு, 25 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon