மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 26 மா 2018

வேலூரில் காணாமல் போன சங்கம்!

வேலூரில் காணாமல் போன சங்கம்!

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் 27

இராமானுஜம்

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் சராசரியாக 125 படங்கள் வரை நேரடி தமிழ் படங்கள் வெளியாகின்றன. இப்படங்களில் சுமார் 700 கோடி முதலீடு செய்யப்படுகிறது. இம்முதலீட்டில் 60% வரை தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் படங்களைத் திரையிடுவதன் மூலம் கிடைக்கும் வசூல் மூலம் கிடைக்க வேண்டும். அவ்வாறு வசூல் மூலம் வருமானத்தைப் பெற முடியாத படங்கள் தோல்வி படங்களாகும்.

சினிமா தொழிலை நேசித்தவர்கள் தயாரிப்பாளர்களாக, விநியோகஸ்தர்களாக, திரையரங்க உரிமையாளர்களாக இருந்தவரை சினிமா தொழில் பெரும் லாபம் இல்லை என்றாலும் நஷ்டமின்றி இருந்தது.

1,069 திரையரங்குகள் இயங்கிவரும் தமிழகத்தில் நியாயம், அநியாயங்களைக் கடைப்பிடித்து ரஜினி, விஜய், அஜித் நடித்த படங்கள் முதல் வாரத்தில் 70% முதலீட்டை டிக்கெட் விற்பனை மூலம் வசூலித்த படங்கள். விநியோகஸ்தர் படம் வாங்குவதற்குக் கொடுத்த விலையை ஈடுகட்டியிருக்கும்.

குறைவான டிக்கெட் கட்டணத்தில் அதிகம் பேர் பார்த்த படம் பாகுபலி 2. தமிழ்நாட்டில் ரூ.120 கோடி வரை வசூல் செய்ததாகக் கூறப்பட்டது. ஆனால், இப்படத்தின் தயாரிப்பாளருக்கு பேசிய விலைக்குப் பாக்கி பணம் இதுவரை கொடுக்கப்படவில்லை.

மெர்சல் படம் தமிழகத்தில் ரூ.150 கோடி வரை மொத்த வசூல் ஆனதாகக் கூறப்பட்டது. ஆனால், இதன் உண்மையான வசூல் கணக்கைத் தயாரிப்பாளர் தேனாண்டாள் முரளியால் விநியோகஸ்தர்களிடமிருந்து பெற முடியவில்லை. இவ்வளவு வசூல் ஆகியிருந்தும் அவருக்கு மெர்சல் படம் மூலம் லாபம் இல்லை. தொடர்ந்து படத் தயாரிப்பில் இருப்பதால் வெளிப்படையாக முரளியால் பேச முடியவில்லை.

படங்கள் நன்றாக ஓடியும் தயாரிப்பாளர்கள் நஷ்டமடையக் காரணம் என்ன? டிஜிட்டல் நிறுவனங்களுக்கு எதிராக, திரையரங்குகளுக்கு எதிராகத் தயாரிப்பாளர்கள் சங்கம் எதிர்வினையாற்றக் காரணம் என்ன என்பதை விவாதிப்பதே இத்தொடரின் பிரதான நோக்கம்.

கோவை, சேலம், கரூர், திருச்சி ஏரியாக்களில் உள்ள திரையரங்குகள் சில தனிநபர்கள் சிண்டிகேட் அமைப்பை உருவாக்கி வியாபார தர்மங்களைக் கடைப்பிடிக்காத போக்கினால் விநியோக தொழில் அழிவில் இருப்பதைக் குறிப்பிட்டிருந்தோம். சிண்டிகேட் அமைப்புகளால் விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்களின் நியாயமான வருமானங்கள் மறைக்கப்பட்டு இழப்பு ஏற்படுகிறது என்பதைக் குறிப்பிட்டு வருகிறோம்.

தமிழகத்தில் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் மதுரை, திருச்சி, கோவை, சேலம், நெல்லை செங்கல்பட்டு பகுதிகளில் பெயரளவு சங்கமாக உள்ளது. இச்சங்கங்களுக்கு இணையாக அதிகாரம்மிக்கதாகச் செயல்பட்டு வந்த வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களை உள்ளடக்கிய வடஆற்காடு, பாண்டி, கடலூர், சிதம்பரம், விழுப்புரம் பகுதிகளை உள்ளடக்கிய தென்னாற்காடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் இன்று பெயரளவில் கூட இல்லை.

இந்த இரண்டு பகுதிகளிலும் 170 தியேட்டர்கள் செயல்பட்டு வருகின்றன. செங்கல்பட்டு விநியோக பகுதிக்கு இணையாக (161 தியேட்டர்) திரையரங்குகள் இருக்கும் இப்பகுதிக்கு புதிய படங்களை வாங்குவதற்கு எந்த விநியோகஸ்தரும் முன்வருவதில்லை.

அப்படியும் தட்டுத்தடுமாறி படம் வாங்கும் விநியோகஸ்தர் தியேட்டர் கேட்டுப் போனால், ‘இன்னுமா தொழிலில் இருக்கறீங்க?’ என ஏளனமான கேள்வியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அப்படியும் போராடி தியேட்டரை பிடித்து படம் போட்ட பின், ஓடி முடிந்து கணக்கு வரும்போது நெஞ்சே வெடித்து விடும் என்கின்றனர்.

அப்படி ஒரு கொடுமை வடஆற்காடு, தென்னாற்காடு பகுதியில் நடக்கிறது. எந்த ஒரு தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தராலும் இதைக் தட்டிக் கேட்க முடியவில்லை. காரணம் ஒற்றை மனிதரின் கட்டுப்பாட்டில் 75 திரையரங்குகள். இவர் சொல்வதுதான் டேர்ம்ஸ். இவரை மீறி எதுவும் செய்ய முடியாது. அவர்தான் கடுமையான உழைப்பாளி எனக் கூறப்படும் எஸ்.பிக்சர்ஸ் நிறுவன உரிமையாளர் சீனு.

அப்படி என்ன கொடுமையான கணக்கு, படம் ஓட்ட கரென்ட்டுக்கும் காசு கொடுத்த பாதிக்கப்பட்டவர்களின் குரல் நாளை காலை 7 மணி பதிப்பில்

பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20 பகுதி 21 பகுதி 22 பகுதி 23 பகுதி 24 பகுதி 25 பகுதி26

வேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா? ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா?

இன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்!

4 நிமிட வாசிப்பு

இன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்!

திங்கள் 26 மா 2018