மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 23 செப் 2020

காய்கறிகள் விலை உயர்வு!

காய்கறிகள் விலை உயர்வு!

கோடை வெப்பத்தால் காய்கறிகள் விளைச்சல் குறைந்து, விலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

கோடைக்காலம் தொடங்கவுள்ளதால் பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டு வெப்பநிலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் காய்கறிகள் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் விளைச்சல் குறையத் தொடங்கியுள்ளது. குறிப்பாக ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் தமிழ்நாட்டைவிடக் கூடுதல் வெப்பநிலை நிலவுகிறது. இதனால் இந்த இரு மாநிலங்களிலிருந்தும் சென்னை கோயம்பேடு காய்கறிகள் சந்தைக்கு வரத்து இரு வாரங்களாக குறைய தொடங்கியுள்ளது. இதனால் தொடர்ந்து இரு வாரங்களாகவே காய்கறிகளின் விலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இதுகுறித்து காய்கறிகள், மலர் மற்றும் பழங்கள் வியாபாரிகள் நலச் சங்கத்தின் பி.சுகுமார் ‘தி இந்து’ ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியில், “தமிழ்நாட்டிலும், அண்டை மாநிலங்களிலும் கோடை வெப்பம் அதிகரித்துள்ளது. இதனால் காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. இதனால் விலையும் அதிகரித்துள்ளது. ஏப்ரலில் வரத்து மேலும் குறைந்து விலை அதிகரிப்பு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்றார். இதன்படி கடந்த வாரம் 15 ரூபாய்க்கு விற்கப்பட்ட வெண்டைக்காய் கிலோ ஒன்றுக்கு மார்ச் 24 அன்று 25 ரூபாயாக அதிகரித்துள்ளது. பீன்ஸ் கிலோ ஒன்றுக்கு 20 ரூபாயிலிருந்து 25 ரூபாயாக அதிகரித்துள்ளது.

கோடை வெப்பத்தினால் காய்கறிகள் வரத்து குறைந்து வருவதால், விலை அதிகரிக்கும் என்று சென்ற வாரத்தில் கோயம்பேடு வர்த்தகர்கள் எச்சரித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 25 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon