மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 13 ஜூலை 2020

தொலைக்காட்சி பாகங்கள் இறக்குமதி வரி குறைப்பு!

தொலைக்காட்சி பாகங்கள் இறக்குமதி வரி குறைப்பு!

எல்.இ.டி. மற்றும் எல்.சி.டி. தொலைக்காட்சி பேனல்களுக்கான இறக்குமதி வரி குறைப்பால் விலை குறையுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

எல்.இ.டி. மற்றும் எல்.சி.டி. தொலைக்காட்சிகளின் பேனல்களுக்கான இறக்குமதி வரி 10 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. மத்திய நிதியமைச்சகம் மார்ச் 23 அன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் வரிக் குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. எல்.இ.டி. மற்றும் எல்.சி.டி. தொலைக்காட்சிகளுக்குப் பயன்படும் ஓபன் செல் என்றழைக்கப்படும் தொலைக்காட்சி பேனல்களுக்கு சுங்க கட்டணம் ஐந்து சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

2018-19 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கலில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி இவற்றுக்கான இறக்குமதி வரியை 10 சதவிகிதமாக அறிவித்தார். இதையடுத்து தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனமான பேனாசோனிக் தொலைக்காட்சி விலையை 6 சதவிகிதம் உயர்த்தியது. அதேபோல மற்ற நிறுவனங்களும் புதிய மாடல் தயாரிப்புகளுக்கான விலையை ஏப்ரல் முதல் உயர்த்தத் திட்டமிட்டிருந்தன. இந்நிலையில் தற்போது மத்திய அரசு இறக்குமதி வரியைக் குறைத்துள்ளது. இது இந்திய தொலைக்காட்சி உற்பத்தி நிறுவனங்களுக்குப் பயனளிக்கும் என்று நம்பப்படுகிறது. இதன்மூலம் நிறுவனங்கள் உயர்த்திய விலையை திரும்பப்பெறும் வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி விலையுயர்த்த திட்டமிட்டிருந்த நிறுவனங்கள் அந்தத் திட்டத்தைக் கைவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஞாயிறு, 25 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon