மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 25 மா 2018

சிதறுமா தியேட்டர் சிண்டி கேட் அமைப்பு!

சிதறுமா தியேட்டர் சிண்டி கேட் அமைப்பு!

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் 26

இராமானுஜம்

தமிழகத்தில் ஆங்காங்கே செயல்பட்டு வரும் சிண்டிகேட் அமைப்புகளுக்கு ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதை தங்கள் செயல்பாட்டின் மூலம் உறுதி படுத்திய கரூர் தியேட்டர் சிண்டிகேட் அமைப்பு, தங்கள் தொழிலுக்கு ஆதார ஸ்ருதியாக இருக்கும் விநியோகஸ்தர்கள் நலன் காக்கும் வகையில் செயல்படவில்லை.

திருச்சி ஏரியாவில் இன்றைக்கு எம்.ஜி. முறையில் படங்கள் திரையிடும் வழக்கத்தை மாற்றியமைக்க முன் உதாரணமாக இருந்தது கரூர் சிண்டிகேட் அமைப்பு என்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.

அதே நேரம் பிற ஊர்களில் 70% டேம்ஸ் வாங்க முடிகிறது. கரூரில் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு கூட 60 % க்கு மேல் டேம்ஸ் தர மறுக்கிறார்கள். இதனால் எம்.ஜி அடிப்படையில் படம் வாங்கும் விநியோகஸ்தர்கள் படம் வெற்றி பெறவில்லை என்றால் பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டியிருக்கிறது.

சிண்டிகேட்டிற்குள் சிண்டிகேட் உருவாகியிருக்கிறது என நேற்று குறிப்பிட்டிருந்தோம். ஏழு திரையரங்குகளின் நலன் காக்க உருவான இந்த அமைப்பு தற்போது மூன்று திரைகளின் வளர்ச்சிக்கு மட்டுமே செயல்படுவதாக குமுறல்கள் எழும்பியுள்ளது.

அஜந்தா, எல்லோரா, திண்ணப்பா திரையரங்குகளுக்கு மட்டும் முக்கியமான படங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தமிழகத்திலேயே உயர் தொழில் நுட்பம், உள்கட்டமைப்புகளுடன் மாற்றி அமைக்கப்பட்டுள்ள கலையரங்கம் தியேட்டருக்கு முக்கிய படங்கள் ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை என்கிற மனக்குமுறல் இருக்கிறது. இது எப்போது வேண்டுமானாலும் வெடித்து சிதறலாம், விநியோகஸ்தர்களுக்கு நன்மை நடக்கும் என காத்திருக்கிறோம் என்கின்றனர் தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும்.

தமிழக திரையரங்க தொழிலில் மிகப் பெரும் மாற்றம் உருவாக காரணமாக இருந்தது கரூர் சிண்டிகேட். தமிழ் சினிமாவின் வியாபார போக்கை மாற்றி அமைத்து விநியோகஸ்தர், தயாரிப்பாளர்கள் பாதிப்பை சந்திக்க காரணமாக இருந்தது வெறும் 7 தியேட்டர்களின் ஒற்றுமை தான் என்பது இந்திய சினிமா சந்தித்திராத அதிசயம். அது விரைவில் முடிவுக்கு வரும் என்கிறார் இவர்களால் பாதிக்கப்பட்ட திருச்சி ஏரியா விநியோகஸ்தர் ஒருவர்.

கரூர் சிண்டிகேட் பற்றி கடந்த இரு நாட்களாக இப்பகுதியில் இடம் பெற்ற தகவல்கள் தவறானவை என சிண்டிகேட் தலைவர் ராதா தன்னிடம் கூறியதாக தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க இணை செயலாளர் திருச்சி ஸ்ரீதர் நம்மிடம் தொலைபேசியில் கூறினார்.

கடந்த 25 நாட்களாக இத்தொடரில் இடம் பெற்றுள்ள தகவல்கள் தனி மனிதன் எழுதும் கற்பனை கதையல்ல. தமிழ் சினிமா விநியோகம், வியாபாரத்தை குறிப்பிட்ட சிலரே தீர்மானிக்கின்றனர்.

புதிதாக தொழிலுக்கு வருபவர்களை வளரவிடுவதில்லை. அதற்கு காரணம் 450 தியேட்டர் களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சில தனிநபர்கள். இதனால் தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

இதனை நமது கவனத்திற்கு கொண்டு வந்தவர்கள் தெரிவித்த தகவல்களை கள ஆய்வு செய்து, இத் தொடர் எழுதப்பட்டு வருகிறது.

திரைப்பட துறையினர் எல்லோருக்கும் தெரிந்த தகவல் தான். அது பொது வெளியில் விவாதத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்பட்டு வருகிறது. எங்கள் தொடர் பற்றி மாறுபட்ட கருத்துடையவர்கள் கருத்து தெரிவித்தால் அதனையும் வெளியிட்டு வருகிறோம். கரூர் சிண்டிகேட் தலைவர் ராதா தங்கள் விளக்கத்தை தருவதாக ஸ்ரீதர் நம்மிடம் தெரிவித்தார்

வட ஆற்காடு, தென்னாற்காடு விநியோகப் பகுதியில் 70 தியேட்டர்களை தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, தயாரிப்பாளர், விநியோகஸ்தர்களை வாட்டி எடுக்கும் சிண்டிகேட்டும் அதனை இயக்குபவரும் யார் ? இவர்களால் சினிமாவுக்கு என்ன பாதிப்பு? நாளை 7 மணி பதிப்பில்

பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20 பகுதி 21 பகுதி 22 பகுதி 23 பகுதி 24 பகுதி 25

வேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா? ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா?

இன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்!

4 நிமிட வாசிப்பு

இன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்!

ஞாயிறு 25 மா 2018