மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 11 ஆக 2020

காலா: டூப் இல்லை ஒரிஜினல்!

காலா: டூப் இல்லை ஒரிஜினல்!

‘காலா படத்தில் இடம்பெறும் சண்டைக் காட்சிகளில் ரஜினிக்கு டூப்பே இல்லை அனைத்தும் ஒரிஜினல்’ என்று சண்டைக் கலைஞர் திலீப் சுப்பராயன் தெரிவித்துள்ளார்.

காலா படத்தின் டீசரை எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், நெருப்புக்கு மத்தியில் வில்லன்களோடு ரஜினி சண்டை போடும் வீடியோ காட்சி லீக்காகி டீசருக்கான எதிர்பார்ப்பை அதிகரித்தது. தனுஷ் அறிவித்த தேதியில் டீசரை வெளியிடுவதற்குள் டீசர் லீக்கானதால் அவசரமாக டீசரை வெளியிட்டார் தனுஷ். இந்த டீசரில் மழையில் நனைந்தபடி ரஜினி போடும் சண்டைக் காட்சிகளைப் பார்க்கும் போது, கபாலிக்கு இணையாக காலாவிலும் அதிக சண்டைக் காட்சிகள் இடம்பெற்றிருக்குமென எதிர்பார்க்கப்பட்டது.

அதனை உறுதிப்படுத்தும் விதமாக இந்தப் படத்தின் சண்டை கலைஞர் திலீப் சுப்பராயன், காலா படத்தில் இடம்பெறும் சண்டைக் காட்சிகள் குறித்தும் ரஜினியின் நடிப்பு குறித்தும் இந்தியா கிளிட்சுக்கு அளித்துள்ள பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

​“காலாவுல மொத்தம் 6 ஃபைட் இருக்கு. இடைவேளைக்கு அப்புறம் முழுக்க ஆக்‌ஷன் காட்சிகள்தான் நிறைய இருக்கும். நீங்க பார்த்த அந்த டயலாக்கை (வேங்கையன் மவன் ஒத்தையில நிக்கேன்) 4000 பேர் சுத்தி நின்னு கத்துனாங்க. அவர் டயலாக் பேசுனது எங்களுக்கு மட்டும்தான் கேட்டுச்சு. அதாவது பக்கத்தில இருக்கவங்களுக்குத்தான் கேட்டுச்சு. ஆனால் அவரோட பாடி லாங்குவேஜ் மாடுலேஷன பார்த்து, சுத்தியிருக்கிற 4000 பேரும் கை தட்டும்போது அப்படி ஒரு எனர்ஜி இருந்துச்சு. அந்த டயலாக் இப்போ ரிலீஸ் ஆயிருச்சு. இருந்தாலும் தியேட்டர்ல இன்னும் அதிகமாக இருக்கும்” என்றார்.

காலாவில் இடம்பெறும் சண்டைக் காட்சிகள் குறித்து விவரித்தவர், “காலாவுல மொத்தம் 6 ஃபைட் இருக்குன்னு சொன்னேன்லயா. அதுல ஒண்ணு டீசரில இடம்பிடிச்ச மழை ஃபைட், அப்புறம் நெருப்புக்கு மத்தியில சார் போடுற ஃபைட்டுன்னு எல்லாம் நல்லா வந்திருக்கு” என்றார்.

​“இந்த படத்தில முக்கியமாக சொல்லனும்னா சாருக்கு டூப்பே போடல... 90 சதவீதம் சார்தான் பண்ணியிருக்கார்” என்று காலா படத்தின் சுவாரஸ்யமான சம்பவங்களை விவரித்துள்ளார் திலீப் சுப்பராயன்.

சனி, 24 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon