மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 24 மா 2018

கரூர் சிண்டிகேட்டுக்குள் ஒரு சிண்டிகேட்!

கரூர் சிண்டிகேட்டுக்குள் ஒரு சிண்டிகேட்!

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் 25

இராமானுஜம்

தமிழகத்தில் முதலில் தொடங்கப்பட்டது கரூர் சிண்டிகேட், இவர்களை பார்த்து சிண்டிகேட் உருவாக்கியவர்கள் எல்லாம் தமிழ் சினிமாவை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். விநியோகஸ்தர்களைச் சுரண்டி கொண்டிருந்த வடக்கு மாவட்ட, மேற்கு மாவட்ட சிண்டிகேட் தலைவர்கள் நேரடியாக தயாரிப்பாளர்களையே சுரண்டிவிட திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

வின்னர் படத்தில் ‘கோட்டுக்கு அந்தப் பக்கம் நானும் வரமாட்டேன். நீயும் வரக்கூடாது’ என வடிவேலு ரியாஸ் கானை நோக்கி வசனம் பேசுவார். கரூர் சிண்டிகேட் இது போன்று யாரிடமும் கூறுவதில்லை. ஆனால், தங்கள் ஆதிக்கத்தை தக்கவைத்துக் கொள்ள எதையும் எதிர்கொள்ளத் தயாராக இருந்தார்கள்.

எட்டு திரையரங்குகள் உள்ள கரூரில் ஏழு தியேட்டர்கள் ஒரு அணி, லெட்சுமி ராம் தனியாளாக இன்று வரை போராடிக் கொண்டிருக்கிறார்.

திருச்சி ஏரியா திரைப்பட வியாபாரத்தை தீர்மானிப்பவர்களாக பிரான்சிஸ், நாரயணசாமி, ராமதாஸ், சுப்பு, G.தியாகராஜன், பரதன் பிலிம்ஸ் பாலாஜி ஆகியோர் உள்ளனர். இவர்களைக் கடந்து சேலம் சிண்டிகேட் போன்று அனைத்து ஏரியாக்களிலும் ஆதிக்கம் செலுத்த கரூர் சிண்டிகேட் இன்று வரை முயற்சிக்கவில்லை.

ஏழு பேர் மட்டுமே புதிய படங்களை வாங்கும் விநியோகஸ்தர்கள். இவர்களை கடந்து கரூர் சிண்டிகேட் முயற்சிக்கவில்லை. காரணம் திருச்சி ஏரியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் தியேட்டர்களை இவர்களில் சிலர் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள்.

கரூர் சிண்டிகேட்டை தலைமை தாங்கி நடத்தும் பகுதி திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் கையில் இருக்கும் "சிண்டிகேட் " என்ற கத்தி வசதியானவர்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என கூறப்படுகிறது. பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட புதுமுகங்கள் நடித்த 'படங்களுக்கு கரூர் சிண்டிகேட்டில் உள்ளே போக வாய்ப்பு கிடையாது என அவர்களே சொல்லிவிடுகிறார்கள்,

கரூர் சிண்டிகேட் ரஜினிமுதல் நேற்று வந்த புதுமுகம் வரை ஒரே மாதிரி தான் டேம்ஸ் என்பதில் உறுதியாகக் கூறுகின்றனர். ரஜினி, அஜித், விஜய் படங்களுக்கு பிற ஊர்களில் 70% வரை டேம்ஸ் வாங்கும் விநியோகஸ்தர்கள், இன்று வரை கரூரில் 50% தாண்ட முடியாமல் தடுமாறுகின்றனர்.

திருச்சி ஏரியாவில் 60% வசூலை தீர்மானிப்பது திருச்சி நகரம், கரூர், தஞ்சை, கும்பகோணம், புதுக்கோட்டை. இவற்றில் கரூர் நகர டேம்ஸ் 50% என்கிற போது விநியோகஸ்தர், தயாரிப்பாளர்கள் பாதிப்படைகின்றனர்.

கரூர் 50% டேம்ஸ் என்பதை தமிழ் சினிமாவின் தலைமை போலீஸ் அதிகாரிகளாக தங்களை எண்ணிக் கொண்டு நாட்டாமை தீர்ப்பு சொல்லி வரும் திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பினால் கூட மாற்ற முடியவில்லை.

அரசு நிர்ணயிக்காத கட்டணத்தில் டிக்கட் விற்கும் கரூர் தியேட்டர்கள் அந்த தொகைக்கு GST, ET வரி செலுத்துவதில்லை. கரூர் சிண்டி கேட் ஒற்றுமைக்காக தொடங்கப்பட்டது. அவர்கள் சாதித்தார்கள். ஆனால் கரூரில் படத்தை திரையிடும் விநியோகஸ்தர்கள் தெருவுக்கு வந்துவிட்டனர். குறிப்பிட்ட சிறு நகரத்தில் செயல்படும் திரையரங்குகள் ஒற்றுமையுடன் இருப்பதால் விநியோகஸ்தர்கள் இவர்களிடம் அடங்கிப்போனார்கள். இதுதான் உண்மை.

தங்கள் தொழிலை லாபகரமாக நடத்த ஒருங்கிணைந்து செயல்பட்ட சிண்டிகேட்டிற்குள் இன்னொரு கூட்டணி உருவாகி சுயநலனுடன் செயல்பட்டு வருகிறதாம்.

அப்படி என்ன சுயநலக் கூட்டணி? நாளை காலை 7 மணிக்கு...

குறிப்பு:

இராமானுஜம் எழுதும் தொடர் குறித்த நாகரிகமான விமர்சனங்களும், மாற்றுப் பார்வைகளும் வரவேற்கப்படுகின்றன. அவை இத்தொடரின் இடையிடையே பிரசுரிக்கப்படும் – ஆசிரியர்.

மின்னஞ்சல் முகவரி: [email protected]

பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20 பகுதி 21 பகுதி 22 பகுதி 23 பகுதி 24

வேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா? ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா?

இன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்!

4 நிமிட வாசிப்பு

இன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்!

சனி 24 மா 2018