மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 21 மா 2018

கரூரில் நடந்தேறிய சதுரங்க வேட்டை!

கரூரில் நடந்தேறிய சதுரங்க வேட்டை!

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களில் ஆதிக்கம் 22

இராமானுஜம்

‘கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக’ என நாட்டுப்புறங்களில் சொல்லப்படும் பழமொழி போன்று 3,500 சினிமா கொட்டகைகள் இருந்த தமிழ்நாட்டில் இன்று 1,100 சினிமா தியேட்டர்கள் என சுருங்கிவிட்டது கலையுலகம்.

“நான் என்ன ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை என் எதிரி முகாம்தான் தீர்மானிக்கிறது’ என்ற கூற்றை திரைப்படத் துறையில் செய்து வெற்றிக்கொடி நாட்டியவர்கள் கரூர் தியேட்டர் உரிமையாளர்கள்.

தமிழகத்தில் முதலில் கரூர் நகரில்தான் தியேட்டர் சிண்டிகேட் உருவானது. காரணம் விநியோகஸ்தர்கள் சங்கம் வானளாவிய அதிகாரம் தங்களுக்கு இருப்பதாக எண்ணி செயல்பட்டதுதான். ஒரு படம் வசூல் இல்லை என்றாலும் அந்தப் படத்தை மாற்றுகிற உரிமை கோடிக்கணக்கில் முதலீடு கொடுத்து தொழில் செய்யும் தியேட்டர் உரிமையாளருக்குக் கிடையாது. புதிய படம் இல்லாத காலத்தில் ஷிப்டிங் முறைப்படி ஒரு படத்தைத் திரையிட்டு இருப்பார் தியேட்டர் முதலாளி. படம் சரியான வசூல் இன்றி ஓடிக் கொண்டிருக்கும்போது வேறு படம் போட விநியோகஸ்தரிடம் அனுமதி வாங்க வேண்டும். சம்பந்தப்பட்ட விநியோகஸ்தர் அனுமதி தர மட்டார்.

ஒப்பந்தபடி குறைந்தபட்ச வசூல் இல்லாததைக் காரணம் காட்டி படம் மாற்றப்படும். இதற்காகக் காத்திருந்த விநியோகஸ்தர் புகார் மனுவுடன் தன் சங்கத்துக்குப் போவார். அதற்குப்பின் அரங்கேறும் அராஜக சட்டங்கள் எந்தத் தொழிலிலும் இல்லாதது. ஆம்... சங்கம் தியேட்டருக்கு அபராதம் என ஒரு தொகையைத் தீர்மானிக்கும். அந்தப் படம் அதே தியேட்டரில் நான்கு வாரம் ஓடினால்கூட வசூல் ஆக முடியாத தொகையாக அது இருக்கும். தூக்கு தண்டனைக்குக்கூட மேல் முறையீடு உண்டு. ஆனால், விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் முடிவு இறுதியானது. மீறினால் தியேட்டருக்குப் படம் தர மாட்டார்கள். இப்படிப்பட்ட இம்சை ஒருபக்கம்.

எம்.ஜி எனும் கொலைகார ஆயுதத்தால் தயாரிப்பாளரும், விநியோகஸ்தரும் தியேட்டர்களை வேட்டையாடத் தொடங்கியதன் விளைவுதான் கரூரில் முதல் சிண்டிகேட் அமைப்பு உருவாகக் காரணம் என்கிறார்கள்.

திரைத் துறையின் ஆதார சுருதியாக வருவாய் ஈட்டித்தரும் கற்பக விருட்சம் தியேட்டர்கள். அவர்கள் எக்கேடு கெட்டாலும் தங்களுக்கு லாபம் கிடைக்க வேண்டும் என நினைத்த விநியோகஸ்தர்களை வீட்டுக்கு அனுப்பி விட்டது சேலம் சிண்டிகேட். சேலம் ஏரியாவுக்கு முதல் போட்டு புதிய படங்களை வாங்க விநியோகஸ்தர்கள் தற்போது இல்லை. வேறு வழியின்றி தயாரிப்பாளர்கள் நேரடி வெளியீடு என அறிவிக்க வேண்டிய சூழலை சிண்டிகேட் உருவாக்கிவிட்டது. குறைந்தபட்ச அட்வான்ஸ் கொடுத்து சேலம் ஏரியா உரிமையைக் கைப்பற்றும் சிண்டிகேட் அமைப்பு, தன் கட்டுப்பாட்டில் இல்லாத திரையரங்குகளைத் தொழில் ரீதியாக முடக்க முயற்சிக்கும். தொழில் நெருக்கடியைத் தாக்குப்பிடிக்க முடியாதவர்கள் சிண்டிகேட்டிடம் சரண் அடைவார்கள்.

இது தமிழ்த் படத் தயாரிப்பாளர்களை வாழ வைக்குமா? சேலத்தில் விநியோகஸ்தர்கள் வாழ்வு மலருமா? விஸ்வரூப வளர்ச்சியை எட்டிய சேலம் சிண்டிகேட் அமைப்புக்குக் குலதெய்வமான கரூர் சிண்டிகேட் தற்போது எப்படி?

நாளை காலை 7 மணிக்கு...

குறிப்பு: இராமானுஜம் எழுதும் தொடர் குறித்த நாகரிகமான விமர்சனங்களும், மாற்றுப் பார்வைகளும் வரவேற்கப்படுகின்றன. அவை இத்தொடரின் இடையிடையே பிரசுரிக்கப்படும் – ஆசிரியர்.

மின்னஞ்சல் முகவரி: [email protected]

பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20 பகுதி 21

வேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா? ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா?

இன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்!

4 நிமிட வாசிப்பு

இன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்!

புதன் 21 மா 2018