மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 16 மா 2018

தமிழ் சினிமாவும் சிண்டிகேட் கலாசாரமும்!

தமிழ் சினிமாவும் சிண்டிகேட் கலாசாரமும்!

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களில் ஆதிக்கம் 18

இராமானுஜம்

தமிழ் சினிமாவில் பாவப்பட்ட ஜீவன்கள் என்றால் அது தயாரிப்பாளர்கள்தான். சொந்த பணமோ அல்லது ஃபைனான்சியரிடம் கடன் வாங்கி படத்தை தயாரிப்பது தயாரிப்பாளர்கள் மட்டுமே. பூஜை அன்று காரில் வரும் தயாரிப்பாளர், படம் ரிலீஸ் முதல்நாள் லேப் கிளியரன்ஸ், ஃபைனான்சியர் பிரச்சினைகளை முடித்துவிட்டு ஆட்டோ அல்லது அந்தப் படத்தின் கதாநாயகன் காரில் லிஃப்ட் கேட்டு வீடு திரும்புவார்.

காலை காட்சி முடியும்போது படம் வெற்றி என்றால் அடமானம் போன காரில் தியேட்டர் விசிட் போகும் அதிர்ஷ்டம் இருக்கும். இல்லை என்றால் நாடோடியாகக் கடன் வாங்கியவர்களுக்குப் பதில் சொல்ல முடியாமல் முடங்கிப்போவார் தயாரிப்பாளர். இதுதான் இன்றைக்கு பெரும்பாலான தயாரிப்பாளர்களின் நிலைமை.

இப்படிப்பட்ட சூழல் உருவாகத் திட்டமிடல் இன்றி தயாரிப்புக்கு வருவதும், சமச்சீரற்ற வியாபார முறைகளும் ஒரு காரணம் எனக் கூற முடியும்.

முதல் நிலை நடிகர் நடித்த படம் அவுட் ரேட் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் வியாபாரம் செய்திருப்பார்கள். ஆனால், குறிப்பிட்ட ஒரு ஏரியா மட்டும் வியாபாரம் ஆவதில் தாமதம், தடுமாற்றம் இருக்கும். இதையெல்லாம் கடந்து ஒரு விநியோகஸ்தர் படத்தை அவுட்ரேட் முறையில் அல்லது விநியோக அடிப்படையில் மேற்குறிப்பிட்ட ஏரியாவுக்கு வாங்கியவர் கரணம் தப்பினால் மரணம் என்கிற நிலையில்தான் தியேட்டர்களை ஒப்பந்தம் செய்ய வேண்டியிருக்கும். சேலம் திரைப்பட விநியோகப் பகுதியில்தான் இந்த அராஜக நடைமுறை இன்றுவரை நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் அதிகமான திரையரங்குகள் செயல்பட்டது சேலம் ஏரியாவில்.

தொடக்கக் காலத்தில் ஸ்டுடியோக்கள் நிறுவப்பட்டது சேலம் மாநகரில். தமிழ் சினிமாவுக்குப் பெருமை சேர்த்த மாடர்ன் தியேட்டர்ஸ் சேலம் நகரில்தான் அமைக்கப்பட்டது. இப்பெருமைமிகு சேலம் ஏரியாவில் தியேட்டர்களை சிண்டிகேட் என்பதன் பெயரால் தர்மபுரி, திருச்செங்கோடு, ஆத்தூர் பகுதிகளில் 16 ஊர்களில் குறிப்பிட்ட திரையரங்கு உரிமையாளர்கள் DNC இளங்கோ, TNT ராஜா, ஆத்தூர் ஸ்ரீதர், புருஷோத்தமன் ஆகியோர் அடங்கிய குழுவின் தலைமையில் இயக்கி வருகின்றனர். இவர்களுக்குத் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் ஆதரவு உண்டு. எந்தப் படமாக இருந்தாலும் அட்வான்ஸ் கிடையாது. அதையும் கடந்து அவுட்ரேட் அடிப்படையில் படம் வாங்கிய விநியோகஸ்தருக்குக் குறைந்தபட்ச அட்வான்ஸ் படம் வெளியீட்டுக்கு முதல் நாள் கொடுக்கப்படும். அதற்கு 3% வட்டி கொடுக்க வேண்டும்.

ரஜினி, விஜய், அஜித் இவர்கள் நடித்த படங்களுக்கு ரசிகர் மன்றச் சிறப்பு காட்சிக்கு ரூ.100 முதல் 150 வரை டிக்கெட் விற்கப்படும். ஆனால் விநியோகஸ்தர், தயாரிப்பாளர்களுக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தில்தான் கணக்கு கொடுப்பாராம் ராஜா. எதிர்த்துக் கேட்பவர்களின் அடுத்த படங்கள் சிண்டிகேட் கட்டுப்பாட்டில் உள்ள தியேட்டர்களில் திரையிட மறுக்கப்படும். இந்தப் பாரபட்சமான அணுகுமுறையை முடிவுக்குக் கொண்டுவர, சேலம் விநியோகஸ்தர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கங்களால் இன்றுவரை இயலவில்லை. வசூலாகும் தொகையில் நியாயமான பங்குத்தொகை விநியோகஸ்தர்களுக்குக் கிடைப்பதில்லை. தமிழகத்தின் பிற பகுதிகளில் சூப்பர் ஹிட்டான திரைப்படங்கள் சிண்டிகேட் தியேட்டர்களில் குறைவான வசூல் ஆனதாகத் திருட்டு கணக்குக் காட்டப்படுவதாகக் கூறப்படுகிறது.

சிண்டிகேட்டில் அங்கம்வகிக்கும் தியேட்டர் பட்டியல், எப்படியெல்லாம் விநியோகஸ்தர்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்பது நாளை......

குறிப்பு:

இராமானுஜம் எழுதும் தொடர் குறித்த நாகரிகமான விமர்சனங்களும், மாற்றுப் பார்வைகளும் வரவேற்கப்படுகின்றன. அவை இத்தொடரின் இடையிடையே பிரசுரிக்கப்படும் – ஆசிரியர்.

மின்னஞ்சல் முகவரி: [email protected]

பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17

வேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா? ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா?

இன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்!

4 நிமிட வாசிப்பு

இன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்!

வெள்ளி 16 மா 2018