மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 14 ஜூலை 2020

சென்னை சூப்பர் கிங்ஸ்: இடம்பெறப் போவது யார்?

சென்னை சூப்பர்  கிங்ஸ்: இடம்பெறப் போவது யார்?

நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் மிட்சல் சான்ட்னெர் இந்த ஐ.பி.எல் தொடரிலிருந்து காயம் காரணத்தால் விலகி உள்ளார்.

இந்தியாவில் மிகவும் பிரபலமான டி-20 தொடர் என்றால் ஐ.பி.எல் தொடரைக் கூறலாம். அதிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது. இந்நிலையில் இந்த வருடத்திற்கான ஐ.பி.எல் தொடருக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஜனவரி (2018) மாதம் வீரர்கள் தேர்வு முடிவடைந்தது.

இந்நிலையில் சென்னை அணியில் தேர்வாகி இருந்த மிட்சல் சான்ட்னெர் காலில் ஏற்பட்ட காயத்தால் இன்னும் 9 மாதங்கள் சிகிச்சை மேற்கொள்ள வேண்டுமென மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக இந்த ஐ.பி.எல் தொடரிலிருந்து அவர் வெளியேறியுள்ளார். இதற்கு முன்னதாக சென்னை அணியில் இடம் பெற்றது மகிழ்ச்சி என அவர் தனது கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். ஆனால் இந்தமுறை அந்த வாய்ப்பு அவருக்கு கிட்டவில்லை. எனவே வெளியேறிய அவருக்குப் பதிலாக சென்னை அணி மீண்டும் ஒரு வீரரைத் தேர்வு செய்யவேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

மிட்சல் சான்ட்னெர் பந்து வீச்சாளர் மட்டுமின்றி சிறந்த ஆல்-ரவுண்டரும் ஆவார். ஆனால் அவரை சென்னை அணி ரூ.50 லட்சம் கொடுத்து ஏலம் பெற்றிருந்தது. தற்போது அதே விலையில் ஏலம் பெறப்படாமல் உள்ள ஏதேனும் ஒரு வீரரை சென்னை அணி தேர்வு செய்து கொள்ளலாம். ஆனால் சென்னை அணி யாரைத் தேர்வு செய்ய உள்ளது, எந்த வீரர் சென்னை அணியில் இடம் பெறப்போகிறார் என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

வியாழன், 15 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon