மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

இன்று உலக நுகர்வோர் உரிமை தினம்!

இன்று உலக நுகர்வோர் உரிமை தினம்!

இந்திய அரசு நுகர்வோர் பாதுகாப்பில் மட்டுமல்லாது நுகர்வோர் பலன்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறது என இந்திய பிரதமர் நரேந்திர மோடி உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தையொட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதோடு நுகர்வோர்களாகிய மக்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நரேந்திர மோடி, “உலக நுகர்வோர் தின வாழ்த்துக்கள். இந்திய பொருளாதாரத்தில் நுகர்வோருக்கு பெரும் பங்கு உள்ளது. இந்திய அரசு நுகர்வோர் பாதுகாப்பில் மட்டுமல்லாது நுகர்வோர் பலன்களிலும் அதிக கவனம் செலுத்துகிறது” என்று குறிப்பிட்டுள்ளார். மத்திய நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சரான ராம் விலாஸ் பஸ்வானும் நுகர்வோர்களுக்குத் தனது வாழ்த்துகளை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

டிஜிட்டல் பரிவர்த்தனையைப் பாதுகாப்பான முறையிலும் சிறப்பான முறையிலும் மேற்கொள்ளவேண்டும் என்பதே இந்த வருடத்துக்கான நுகர்வோர் தினத் தீர்மானமாக உள்ளது. உலகில் முதன்முதலில் நுகர்வோருக்கான சட்டம், உரிமை, பாதுகாப்பு என 1962ஆம் ஆண்டில் மார்ச் மாதம் 15ஆம் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜான் எஃப்.கென்னடி அமெரிக்க பாராளுமன்றத்தில் சிறப்புரை ஆற்றியதைச் சிறப்பிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 15ஆம் தேதி உலக நுகர்வோர் உரிமைகள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 15 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon