மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 14 ஜூலை 2020

குரங்கணி காட்டுத் தீ: பலி எண்ணிக்கை உயர்வு!

குரங்கணி காட்டுத் தீ: பலி எண்ணிக்கை உயர்வு!

குரங்கணி காட்டுத் தீயில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கண்ணன், அனுவித்யா ஆகியோர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி மலைப்பகுதியில் கடந்த ஞாயிறன்று ஏற்பட்ட காட்டுத் தீயில் சென்னை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 11 பேர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து, மதுரையில் சிகிச்சை பெற்று வந்த திவ்யா என்ற பெண் நேற்று உயிரிழந்தார்.

இந்நிலையில், இன்று மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கவுந்தம்பாடியை சேர்ந்த கண்ணன், சென்னையை சேர்ந்த அனுவித்யா ஆகியோர் உயிரிழந்தனர் . இதனால் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கண்ணன், , தேவி, சிவசங்கர் ஆகியோரைத் தமிழக அரசு அமைத்துள்ள மருத்துவக் குழுவினர் நேரில் சென்று பார்த்துள்ளனர்.

இதுகுறித்து, தீக்காயப் பிரிவு பேராசிரியர் ஏஞ்சலின், “நான்கு பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அனைத்துச் சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருகிறது.

தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் இவர்களில் கண்ணன் ,அனு வித்யா ஆகியோருக்கு சிறுநீரகம் செயலிழந்திருந்ததாகவும், டயாலிசிஸ் முறையில் அவர்களுக்கு ரத்த சுத்திகரிப்பு செய்யப்பட்டு வந்ததாகவும் தெரிவித்தார். எனினும் இருவரும் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்தார்.

வியாழன், 15 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon