மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 14 ஜூலை 2020

வினாத்தாள் லீக் : சிபிஎஸ்இ மறுப்பு!

வினாத்தாள் லீக் : சிபிஎஸ்இ மறுப்பு!

சிபிஎஸ்இ ப்ளஸ் 2 பொதுத் தேர்வு அக்கவுண்டன்சி வினாத்தாள் வெளியானது என்ற தகவலுக்கு சிபிஎஸ்இ மறுப்பு தெரிவித்துள்ளது.

சிபிஎஸ்இ ப்ளஸ் 2 பொதுத்தேர்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றது. அக்கவுண்டன்சி பாடத்திற்கான தேர்வு இன்று நடைபெற இருந்த நிலையில் அப்பாடத்தின் வினாத்தாள் நேற்று மாலை (மார்ச் 14) வாட்ஸ் அப்பில் வெளியானது.

இந்நிலையில், வினாத்தாள் வெளியானதாகப் பரவிய தகவலுக்கு சிபிஎஸ்இ மறுப்பு தெரிவித்துள்ளது.

சிபிஎஸ்இ, “அக்கவுண்டன்சி வினாத்தாள் லீக் ஆகவில்லை. வினாத்தாள்கள் அடங்கிய பார்சல் சீல் பிரிக்கப்படாமல் தேர்வு மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்கள் மூலம் பொய்யான தகவல்களை சிலர் பரப்புகின்றனர். இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' எனத் தெரிவித்துள்ளது.

வினாத்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக டெல்லி கல்வி அமைச்சர் மணிஷ் சிசோடியா இன்று காலை விசாரணை நடத்தும்படி, கல்வி செயலாளர் மற்றும் கல்வி இயக்குநரிடம் கோரினார். அப்போது,வாட்ஸ் அப்பில் வந்த வினாத்தாளும் உண்மையான வினாத்தாளும் ஒத்துப் போவதாக அவர்கள் தெரிவித்தனர். வினாத்தாள் வெளியானது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் மணிஷ் சிசோடியா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 15 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon