மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

நடிகர் சங்கத்தில் பிரியாமணி புகார்!

நடிகர் சங்கத்தில் பிரியாமணி புகார்!

விளம்பரத்திற்கு தன்னை பயன்படுத்தியதற்காக நஷ்ட ஈடு அளிக்கக் கோரி நடிகை பிரியாமணி தெலுங்கு நடிகர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துவருபவர் பிரியாமணி. தமிழில் இவரது நடிப்பில் பருத்திவீரன் மலைக்கோட்டை, நினைத்தாலே இனிக்கும், ராவணன், சாருலதா போன்ற படங்கள் வெளியாகின. தற்போது இவருடைய நடிப்பில் தசரதா, வியூகா, நன்ன பிரகரா, ட்வஜா போன்ற படங்கள் உருவாகிவருகின்றன. இந்நிலையில் இவர் தற்போது தெலுங்கு சினிமாவில் நஷ்ட ஈடு கேட்டு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

தெலுங்கில் இயக்குநர் பிரேம் ஆர்யன் இயக்கத்தில் 'அங்குலிகா' என்ற படம் உருவாகிவருகிறது. இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க 5 வருடங்களுக்கு முன்னர் பிரியாமணி ஒப்பந்தமாகியுள்ளார். படப்பிடிப்பில் கலந்து சில காட்சிகளில் நடித்த நிலையில் படத்தில் நடிக்காமல் படத்திலிருந்து விலகிவிட்டார். அதனால் படப்படிப்பு பாதியிலேயே கைவிடப்பட்டது. தற்போது மீண்டும் இப்படம் உருவாகிவருகிறது. இந்தப் படத்தில் ஹீரோவாக அருந்ததி படத்தில் அனுஷ்காவுக்கு ஜோடியாக நடித்த தீபக் நடித்துள்ளார்.

இந்தப் படத்தின் ப்ரோமோ வீடியோ ஒன்றை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் பிரியாமணி நடித்த சில காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதனைக் கண்ட பிரியாமணி அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து தற்போது தெலுங்கு நடிகர் சங்கத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், “அங்குலிகா படத்தில் இருந்து 5 வருடங்களுக்கு முன்பே வெளியேறிவிட்டேன். ஆனால் விளம்பரத்துக்காக என்னை இந்த வீடியோவில் காட்டியுள்ளனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதற்காக எனக்கு நஷ்ட ஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

வியாழன், 15 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon