மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

சரிவடைந்த ஜவுளி உற்பத்தி!

சரிவடைந்த ஜவுளி உற்பத்தி!

நடப்பு நிதியாண்டின் ஜனவரி வரையிலான 10 மாதங்களில் இந்தியாவின் ஒட்டுமொத்த ஜவுளி உற்பத்தி 10.4 சதவிகிதம் சரிவடைந்துள்ளதாக இந்தியத் தொழில் துறை உற்பத்தி ஆய்வறிக்கை கூறுகிறது.

2017ஆம் ஆண்டின் மே மாதம் முதலே இந்தியாவில் ஜவுளி உற்பத்தி குறைந்து வருகிறது. அதாவது ஏப்ரல் மாதத்தில் ஜவுளி உற்பத்தி 1.3 சதவிகித வளர்ச்சி கண்டிருந்த நிலையில் மே மாதத்தில் அது 5 சதவிகிதம் சரிவைச் சந்தித்தது. அதைத் தொடர்ந்த ஜூன் மாதத்தில் 3.2 சதவிகிதமும், ஜூலை மாதத்தில் 5.1 சதவிகிதமும், ஆகஸ்ட் மாதத்தில் 6.4 சதவிகிதமும், செப்டம்பர் மாதத்தில் 7.2 சதவிகிதமும், அக்டோபர் மாதத்தில் 11 சதவிகிதமும், நவம்பர் மாதத்தில் 13.1 சதவிகிதமும் மற்றும் டிசம்பர் மாதத்தில் 13.5 சதவிகிதமும் ஜவுளி உற்பத்தி சரிவடைந்தது. நடப்பு 2017-18 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான 10 மாதங்களில் ஜவுளி உற்பத்தியில் 10.4 சதவிகித சரிவு ஏற்பட்டுள்ளது.

ஆடைகள் ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சில் தலைவர் ஹெச்.கே.எல்.மகு உற்பத்திச் சரிவின் விளைவுகள் குறித்து தி டாலர் பிசினஸ் ஊடகத்திடம் பேசுகையில், “ஏற்கெனவே ஆடைகள் ஏற்றுமதி சரிவைச் சந்தித்திருக்கும் வேளையில் உள்நாட்டில் ஜவுளி உற்பத்தியில் சரிவு ஏற்பட்டுள்ளது. ஜனவரி மாதத்தில் ஜவுளி ஏற்றுமதியில் 14 சதவிகித சரிவு ஏற்பட்டுள்ளது. ஊக்கத்தொகை வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதால் போதிய நிதியில்லாமல் ஜவுளி ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே ரீபண்ட் தொகை கிடைக்கும் வரை இதே நிலைதான் நீடிக்கும். இதனால் ஆடை ஏற்றுமதியில் 20 பில்லியன் டாலர் மதிப்பை அடையும் இலக்கு இன்னும் கடினமாகும்” என்றார்.

வியாழன், 15 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon