மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

செல்சேவை வீழ்த்திய மெஸ்சி!

செல்சேவை வீழ்த்திய மெஸ்சி!

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் இன்று (மார்ச் 15) நடைபெற்ற இரண்டாவது லெக் ஆட்டத்தில் பார்சிலோனா அணி 3-0 என்ற கோல்கணக்கில் செல்சே அணியை வீழ்த்தியது.

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் நடைபெற்று வருகிறது. அதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டம் ஒன்றில் பார்சிலோனா அணியும் செல்சே அணியும் பலபரிட்சை நடத்தின. இதற்கு முன்னர் இவ்விரு அணிகளுக்குமான முதல் லெக் போட்டி கடந்த மாதம் (பிப்ரவரி 21) நடைபெற்றது. அதில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து போட்டியை சமன் செய்தன. அதன் தொடர்ச்சியாக இன்று நடைபெற்ற இரண்டாவது லெக் போட்டியில் முன்னிலை பெறும் அணி வெற்றிபெறும் என்ற நிலையுடன் களமிறங்கின.

தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய பார்சிலோனா அணி செல்சே வீரர்களுக்கு வாய்ப்பு வழங்காமல் தொடர்ச்சியாக கோல்களை சேர்க்கத் தொடங்கியது. போட்டி தொடங்கிய மூன்றாவது நிமிடமே லியோனல் மெஸ்சி முதல் கோல் அடித்து அணியை முன்னிலை பெற செய்தார். அதன் தொடர்ச்சியாக பார்சிலோனா வீரர் டெம்பில் 20 ஆவது நிமிடத்தில் மற்றொரு கோல் அடிக்க முதல் பாதியிலேயே செல்சே அணி 0-2 என்ற கோல் கணக்கில் பின்னடைவு பெற்றது. இரண்டாவது பாதியில் செல்சே அணி வீரர்கள் பார்சிலோனா அணிக்கு கடும் சவாலாக அமைந்தனர். இருப்பினும் 63ஆவது நிமிடத்தில் மெஸ்சி மீண்டும் ஒரு கோல் அடித்து 3-0 என அணியை முன்னிலை பெறச் செய்தார். போட்டியின் முடிவு வரை செல்சே அணி வீரர்கள் கோல் அடிக்கவில்லை. எனவே 3-0 என பார்சிலோனா அணி முன்னிலை பெற்றிருந்தது. முதல் லெக் கோல்களையும் சேர்த்து 4-1 என்ற கோல்கணக்கில் வெற்றியும் பெற்றது.

இந்த போட்டியில் 2 கோல்களை அடித்த மெஸ்சி ஒட்டு மொத்தமாக இதுவரை சாம்பியன்ஸ் லீக் தொடரில் மட்டும் 100 கோல்களை அடித்து அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். முதலிடத்தில் ரியல் மாட்ரிட் அணி வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 117 கோல்களுடன் உள்ளார்.

வியாழன், 15 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon