மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 14 ஜூலை 2020

சுங்கச் சாவடி வருவாய் உயர்வு!

சுங்கச் சாவடி வருவாய் உயர்வு!

நடப்பு நிதியாண்டின் கடைசிக் காலாண்டில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சுங்கச் சாவடி வாயிலான வருவாய் அதிகரித்துள்ளது. எனினும், நெடுஞ்சாலை அமைப்புப் பணிகள் இலக்கை விட மிக மந்தமாகவே நடைபெற்று வருகின்றன.

நடப்பு நிதியாண்டில் சுங்கச் சாவடிகள் வாயிலாக ரூ.32,950 கோடி வசூலிக்க இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இதுவரையில், ரூ.32,651.53 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இது ரூ.298.47 கோடி குறைவாகும். நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.4,550 கோடி வசூலிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, ரூ.4,410.39 கோடி வசூலிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்த இரண்டாம் காலாண்டில் ரூ.10,900 கோடி வசூலிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, ரூ.10.812.43 கோடி வசூலிக்கப்பட்டது. மேலும், அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் ரூ.17,428.71 கோடி வசூலிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு ரூ.17,500 கோடி வசூலிக்கப்பட்டது.

சாலை அமைப்புப் பணிகளைப் பொறுத்தவரையில், டிசம்பர் மாத நிலவரப்படி, நாள் ஒன்றுக்குச் சராசரியாக 23 கிலோ மீட்டர் அளவிலான நெடுஞ்சாலைகள் மட்டுமே சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையால் அமைக்கப்பட்டுள்ளது. இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள 41.09 கிலோ மீட்டர் அளவை விட இது மிகமிகக் குறைவாகும். ஏப்ரல் - டிசம்பர் காலாண்டில் மொத்தம் 11,362 கிலோ மீட்டர் அளவிலான நெடுஞ்சாலை அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், வெறும் 4,561 கிலோ மீட்டர் அளவிலான சாலை மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை சுங்கச் சாவடி வாயிலான வருவாய் அதிகரித்து வந்தாலும் இந்த அரசு சாலை அமைக்கும் பணிகளில் தொடர்ந்து மந்தமாகவே செயல்பட்டு வருகிறது.

வியாழன், 15 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon