மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

அதென்ன அம்மாவால் முன்னேறிய மக்கள் கழகமா? -அப்டேட் குமாரு

அதென்ன அம்மாவால் முன்னேறிய மக்கள் கழகமா? -அப்டேட் குமாரு

தமிழ்நாட்டின் அஞ்சு கட்சிக்காரங்களையும் ஒரே டீ கடைல பாத்தேன். அதென்ன பாஸ் ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்?’ இதை சாதாரணமா தான் கேட்டேன். அதாவது பாஸு, அம்மா ஆட்சில இருந்தப்ப அதை வெச்சு முன்னேறிய அவங்க மக்களைக் கொண்ட கழகம்னு அர்த்தம். இதை சொல்லி முடிச்சதும், ட்விட்டர்ல ஐடி வெச்சிருக்கீரா அமைச்சரேன்னா, எப்டி கரெக்டா கண்டுபுடிச்சீங்கன்றார். அட இதென்னங்க பெரிய சமாச்சாரம். எங்காளுக ஒன்றையணா பணமே இல்லாம பல ஆயிரம் கோடிகளுக்கு பட்ஜெட் விட்ருக்கோம். இதெல்லாம் ஹிஸ்டாரிக்கல் ரெகார்டுன்னு அவர் சிரிச்சதும், பக்கத்துல இருந்தவர் பேசத் தொடங்குனார். அதுக்குள்ள அந்தவழியா போன ஒருத்தர் அவருக்கு கைகுடுத்து நன்றி சொல்லிட்டு போனார். யார் அவரு எதுக்கு தேங்க்ஸ் சொன்னாருன்னு கேட்டா, 1000 கருப்பு சட்டை ஆர்டர் குடுத்தது வாங்கி போட்டாங்களாம். அதுல நல்ல வருமானம் வந்ததால நன்றி சொல்ல வந்தாராம். அதெப்படிங்க, அப்பப்ப கருப்பு சட்டை வாங்குவீங்களா? பர்மனெண்ட்டா வெச்சிக்கிட்டா தான் என்ன? அப்படின்னு கேட்டதுக்கு, அதெல்லாம் அரசியல்வாதிக்கு சரிவராது சார். அப்பப்ப போட்டுக்குவோம். அப்பப்ப அவுத்து வெச்சிருவோம்ன்றார். அதுசரி, நீங்க காசு குடுத்து வாங்குனதே பெரிய விஷயம் தான் பாஸுன்னுட்டு வந்துட்டேன். அந்த இன்னொரு கட்சிக்காரர், இன்னைக்கு தெய்வத்துக்கு மௌன விரதம் இருக்காராம். அதனால பேசமாட்டாராம். அதனால சைலண்டாவே போய்ட்டாரு. இவங்களோட எல்லாம் மாரடிச்சு மண்டை காஞ்சு போய் கிடக்கேன். ரெஸ்ட் எடுத்துட்டு வந்து பேசுவோம். அதுக்குள்ளாற் அப்டேட்டைப் படிச்சு முடிச்சிட்டு போய்டுங்க.

Jeeva Karikalan

நல்லவேளை அவர் இறந்துபோனதால் அதை அவர் வாசிக்க வாய்ப்பேயில்லை.

Sakthi Saravanan

மூன்றாவது கலைஞருக்கே இப்படி ஜெர்க் ஆகறானுங்களே! இன்னும் இரண்டாவது கேப்டன், நாலாவது சீமான் எல்லாம் பாத்தா ஸ்பாட்ல ஹார்ட் அட்டாக்ல போயிடுவானுங்க. இரண்டாவது குட்டிம்மா தீபாவை பாத்துட்டா காவடி எடுத்துக்கிட்டு பழனிக்கு போயிடுவானுங்க.

Bobby Gopi

ஒரு நாளைல நாம சொல்ற பொய் எதுல ஆரம்பிக்குதுன்னு தெரியுமா....

எங்க வந்துட்டு இருக்க??

Muthu Ram ·

Aircel குரூப் கம்பெனிய ஊத்தி மூடிட்டு நேரா போய் ஏர்டெல்ல வாங்கிட்டானுங்க போல. சுத்திட்டே இருக்கு.

@வாசுகி பாஸ்கர்

அதிமுகவுக்கு சம்மந்தமேயில்லாம பெருஞ்சுமையாக ஒட்டிக்கொண்டிருந்த அண்ணாவையும், திராவிடத்தையும் கழட்டி விட்டு, அதிமுக என்றால் “அம்மா” மட்டுமே என்கிற நிதர்சனத்தோடு கட்சிக்கு பெயர் வைத்திருக்கும் தினகரனின் நேர்மைக்கு வாழ்த்துக்கள்.

@Prabakar Kappikulam

அமமுக

என்னது..?

அமமுக

யார அமுக்க..?

யுவான் சுவாங்

:இன்ஸ்டாக்ராம்ல உங்க போட்டோஸ்லாம் நைஸ் தோழி.

:ஹோ!! இன்ஸ்டால கூட இருக்கீங்களா.!?

:ஆமா ஃபாலோ ரெக்வெஸ்ட் அனுப்பிருக்கேன் பாருங்க.

:ஓகே ஓகே அக்செப்ட் பண்ணிடுறேன்.

:வாட்சப்ல கூட இருக்கேன் தோழி.

:அப்பிடியா.?! நானும் இருக்கேன்.இதான் என் வாட்சப் நம்பர்.

:நைஸ் தோழி

ஒரு முன்னாள் ப்ளேபாயின் டைரி குறிப்புகள்.

தே சிம்சன்

கடனுக்கு வாழ்கிறோம் என்றாலும் வயிற்றுக்கு உணவென்ற வட்டி கட்டியே ஆகனும்.!

Sangeetha R

திட்டினாலோ கோபித்துக் கொண்டாலோ ஏன் வெறுத்து ஒதுக்கினால் கூட எப்படி எதிர்வினையாற்றுவது என்று கற்று வைத்திருக்கிறேன்.

ஆனால் இந்த தலை கால் புரியாத "அன்பை" மட்டும் எப்படி எதிர் கொள்வது என்று கற்றுக் கொள்ள வேண்டும்.

ச ப் பா ணி

எதிரி வெளியே இல்லை. நம் உள்ளேயேதான் இருக்கிறான்

என்பது வாட்ஸ் அப் குரூப்புக்கு பொருந்தும்

பிளாக் லைட்

ஜெயலலிதா நினைவு மண்டபம் மெரினாவில் ரூ.50.80 கோடியில் அமைக்கப்படும் - ஓபிஎஸ்

நீங்க நினைவுமண்டபம் வையுங்க.. பெயரை நாங்க வைக்கிறோம். மீம்ஸ்_கிரியேட்டர்ஸ்

xlntgson

மெக்கானிக்கல் இஞ்சினீயர், அவனுக்கென்று சொந்தமாக ஒரு மோட்டர்பைக்கூட இல்லை

அர்ஜூன்

கோடையில் ஒருநாள்

அடைமழை என்றால்

குடைகூட அந்நேரம்

அருவருப்புதான்..

நாடு எங்க போகுது???

வருசா வருஷம் இந்த குளிர் காலம் வருது, மழை காலம் வருது, வெயில் காலம் வருது...

ஆனா நமக்கு தான் ஒரு விடிவு காலம் வரமாட்டிங்குது...???

அசோகன்*

ஏன்யா டெய்லி காலைல பேப்பர் போடுரியே என்னிக்காவது ஒரு தடவையாது உட்காந்து ஆர அமர படிச்சு பாத்திருக்கியானு கேட்டா அதுக்கெல்லாம் நேரமில்லனுட்டு போராப்ல

கோழியின் கிறுக்கல்!!

நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கை பள்ளிக்கூடம் முதல் பணியிடம் வரை யாரோ போடும் 'டைம் டேபிள்' படியே இயங்குகிறது!!!

பாண்டி பிரகாஷ்

உனை காணும் போதெல்லாம், நிமிர்த்த முடியாத நாய் வால் போலாகிறது என் கண்கள், நான் என்ன சொன்னாலும் உனை பார்ப்பதை நிறுத்துவதில்லை..

அன்பு

ஹெச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய முடியாது: உயர்நீதிமன்றம்

குண்டர் சட்டம் இல்லன்னா பிரியாணி குண்டா கேஸுலயாவது கைது செய்யுங்க

-லாக் ஆஃப்.

வியாழன், 15 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon