மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 14 ஜூலை 2020

பருத்தி உற்பத்தி அளவு குறைப்பு!

பருத்தி உற்பத்தி அளவு குறைப்பு!

2017 அக்டோபர் முதல் 2018 செப்டம்பர் வரையிலான பயிர் பருவத்தில் பருத்தி உற்பத்தி அளவை 362 லட்சம் மூட்டைகளாக இந்திய பருத்திக் கூட்டமைப்பு குறைத்துள்ளது. இது முந்தைய மதிப்பீட்டு (367 லட்சம் மூட்டை) அளவை விட 5 லட்சம் குறைவாகும்.

இதுகுறித்து இந்திய பருத்தி கூட்டமைப்பின் தலைவர் அதுல் கனத்ரா பிசினஸ் லைன் ஊடகத்திடம் பேசுகையில், “பருத்தியில் காணப்படும் கடுமையான இளஞ்சிவப்பு நோய் தொற்று மற்றும் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களின் தண்ணீர் பற்றாக்குறையே பருத்தி உற்பத்தி குறைவதற்கான காரணமாகும். உற்பத்தியின் மதிப்பீட்டில் குறைந்துள்ள 5 லட்சம் மூட்டைகளில் ஆந்திராவில் 2 லட்சம், கர்நாடகாவில் 2 லட்சம் மற்றும் பிற மாநிலங்களில் ஒரு லட்சம் என்ற அளவில் உற்பத்தி குறையும். இப்பருவத்திற்கான மொத்த பருத்தி விநியோகம் 412 லட்சம் மூட்டைகளாகவும், நுகர்வு 330 லட்சம் மூடைகளாகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

இந்திய பருத்திக்கு வெளிநாட்டில் தேவை அதிகரித்ததாலும், பருத்திக்கான விலையை ஐசிஇ நிறுவனம் அதிகம் நிர்ணயித்ததாலும் ஏற்றுமதி 55 லட்சத்திலிருந்து 60 லட்சம் மூட்டைகளாக அதிகரித்துள்ளது. ஏற்றுமதி போக மீதமிருக்கும் கையிருப்பு நடப்பாண்டில் (செப்டம்பர் 30 நிறைவில்) 22 லட்சம் மூட்டைகளாக இருக்கிறது. இது சென்ற ஆண்டு கையிருப்பு அளவை விட 20 லட்சம் மூட்டைகள் குறைவாகும். அதாவது சென்ற ஆண்டின் இறுதியில் மொத்தம் 42 லட்சம் மூட்டைகள் அளவிலான பருத்தி இருப்பில் இருந்தது.

வியாழன், 15 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon