மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

புகைப்பழக்கம்: கேட்கும் திறன் குறையும் அபாயம்!

புகைப்பழக்கம்: கேட்கும் திறன் குறையும் அபாயம்!

மனிதர்களின் புகைபிடிக்கும் பழக்கத்தால் இதயம், நுரையீரல் ஆகியவை பாதிக்கப்படுவதல்லாமல், கேட்கும் திறனும் பாதிக்கப்படும் என ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

புகைபிடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, சுமார் 50 ஆயிரம் பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில் வெளியிடப்பட்ட அறிக்கையில், புகைபிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களை விட, புகைப்பழக்கம் உள்ளவர்களுக்குக் கேட்கும் திறன் குறையும் அபாயம் அதிகமாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

புகைப்பழக்கம் கேட்கும் திறனை 20லிருந்து 60 சதவீதம் வரை பாதிக்கும். ஒலி மாசுவினால் கேட்கும் திறன் பாதிக்கப்படும். ஆனால் ஒலி மாசுவினால் ஏற்படும் பாதிப்பை விடப் புகைப்பழக்கத்தால் கேட்கும் திறன் அதிக அளவில் பாதிக்கப்படும்.

"பல ஆண்டுகளாக இதுகுறித்து தீவிரமாக ஆராய்ச்சி செய்த பின்னரே இந்த முடிவு வெளியிடப்பட்டது. புகைப்பழக்கம் கேட்கும் திறனை அதிக அளவில் பாதிக்கும் என்பதற்கு இந்த ஆராய்ச்சி முக்கிய ஆதாரமாக அமையும். மேலும் கேட்கும் திறன் முழுவதும் பாதிக்கப்படுவதற்கு முன் புகைப்பழக்கத்தை நிறுத்துவது மிக அவசியமானது" என ஜப்பான் விஞ்ஞானி குயான்குயான் தெரிவித்துள்ளார்.

வியாழன், 15 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon