மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 14 ஜூலை 2020

பாக்.சீனா: துண்டிக்கப்படும் இந்தியக் கிராமங்கள்!

பாக்.சீனா: துண்டிக்கப்படும் இந்தியக் கிராமங்கள்!

இந்தியாவில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ள எல்லையோர கிராமங்களை இணைப்பதற்கான முயற்சியில் ராணுவம் ஈடுபட்டுள்ளதாக ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

இந்திய- பாகிஸ்தான் எல்லை பகுதியில் எப்போதும் சண்டை நடந்துகொண்டே இருக்கிறது. இதனால் எல்லைப் பகுதி எப்போதும் பதற்றமாகவே காணப்படும். மேலும் இந்தியா-சீனா எல்லை கட்டுப்பாடு கோடு பகுதிகளில், சீனா தனது படைகளைக் குவித்து வருவதினால், அங்கும் தற்போது பதட்டமான சூழல் நிலவுவதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், எல்லை பகுதியில் பாகிஸ்தான் மற்றும் சீனாவின் ஆக்கிரமிப்புகள் மற்றும் அத்துமீறல்களால் அப்பகுதியில் இருக்கும் கிராமங்கள் நாட்டை விட்டுத் துண்டிக்கப்படும் நிலையில் இருப்பதாக ராணுவத் தலைமைத் தளபதி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசியவர், "சீன நாட்டின் படை வலிமையை மறந்துவிடக்கூடாது. மேலும் பொருளாதார ரீதியாக மட்டுமின்றி ராணுவ படைபலத்திலும் வலிமை பெற்றுள்ள சீனாவின் வளர்ச்சியைத் தடுக்க, உலக நாடுகளின் கவனம் இந்தியாவின் பக்கம் திரும்பியுள்ளது" என பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

வியாழன், 15 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon