மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 14 ஜூலை 2020

சிவகார்த்தி கனவை நனவாக்கிய ரசிகர்!

சிவகார்த்தி கனவை நனவாக்கிய ரசிகர்!

தந்தையுடன் நிற்பது போல் ரசிகர் ஒருவர் வரைந்த ஓவியத்தைப் பார்த்து உருக்கமாக நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

சின்னத்திரையில் அறிமுகமாகிய சிவகார்த்திகேயன், தன்னுடைய நடிப்புத் திறமையால் அனைவரது பாராட்டையும் பெற்றார். தொடர்ந்து அவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் வெற்றி பெற்ற நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து தற்போது முன்னணி நடிகர் வரிசையில் ஒருவராக உயர்ந்திருக்கிறார்.

எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் அவருக்குள் ஒரு நெருடல் மனதை உறுத்திக் கொண்டே இருந்தது. “நான் சம்பாதித்து என் தந்தைக்கு எதுவுமே வாங்கிக் கொடுத்ததில்லை. குறைந்தபட்சம் ஒரு புகைப்படம் கூட அவருடன் நான் எடுத்ததில்லை. இன்று அவர் உயிருடன் இல்லை” என்று விஜய் டிவி விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற சிவகார்த்திகேயன் கண்ணீருடன் கூறினார்.

இந்நிலையில் ரசிகர் ஒருவர் சிவகார்த்திகேயன் மைக்கில் பேசிய புகைப்படத்தை எடுத்து சிவகார்த்திகேயனின் தோளில் அவரது தந்தை கை போட்டபடி நிற்பது போல் ஓவியமாக வரைந்துள்ளார். இதையடுத்து, அந்த ஓவியத்தை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள சிவகார்த்திகேயன், “எப்படி உங்களுக்கு நன்றி சொல்வதென்று தெரியவில்லை. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என் அப்பாவோடு ஒரு நல்ல புகைப்படம்கூட எடுக்கவில்லை. இந்த ஓவியம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே...” என அந்த ரசிகருக்கு உருக்கமாக நன்றியை தெரிவித்திருக்கிறார்.

வியாழன், 15 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon