மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 14 ஜூலை 2020

குழாய் மூலம் பக்தர்களுக்கு பால், டீ!

குழாய் மூலம் பக்தர்களுக்கு பால், டீ!

ஏழுமலையானை தரிசிக்க வரும் மக்களுக்குக் குழாய் மூலம் பால், டீ, காஃபி உள்ளிட்டவற்றை வழங்கத் திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

திருமலையில் ஏழுமலையானைத் தரிசிக்க வரும் பக்தர்கள் வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸில் காத்திருந்து பிறகு சுவாமியைத் தரிசிப்பது வழக்கம். கூட்டம் அதிகமாக இருக்கும் நேரங்களில் பல மணி நேரம் பக்தர்கள் காத்திருக்க வேண்டியதாக உள்ளது. இவ்வாறு காத்திருக்கும் பக்தர்களுக்குப் பால், டீ, காஃபி, உணவு போன்றவை வழங்கப்பட்டு வருகிறது.

இன்று (மார்ச் 15) திருமலையில் உள்ள அன்னமயபவனில் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

தேவஸ்தான இணை அதிகாரி கேஎஸ் சீனிவாசராஜு, “திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு பால், டீ, காஃபி மற்றும் அன்னப்பிரசாதம் வழங்கப்படுகிறது. சமையல் அறைகளில் இருந்து ஊழியர்கள் மூலமாக வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ், திருமலையில் உள்ள பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பக்தர்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. அப்போது டீ, பால், காஃபி கேன்கள் கீழே விழுந்து உடைந்து விடுகின்றன. எனவே அதைத் தடுக்க குழாய்கள் மூலமாகப் பால், டீ, காஃபி ஆகியவற்றைக் கொண்டு சென்று பக்தர்களுக்கு வினியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. குழாய்கள் பதிக்கவும், அன்னதானக் கூடத்தில் பக்தர்களுக்கு உணவு தயாரிக்க தேவையான மூலப்பொருட்களை கிரேன் மூலமாக கொண்டு செல்லவும், சென்னை ஐஐடி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்காக எலெக்ட்ரிக் பேருந்துகள் இயக்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்திருந்தது.

வியாழன், 15 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon