மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

தமிழக பட்ஜெட்: சிறப்பம்சங்கள்!

தமிழக பட்ஜெட்: சிறப்பம்சங்கள்!

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் 2018-19ஆம் நிதியாண்டுக்கான தமிழ்நாட்டின் பட்ஜெட்டை துணை முதல்வரும், நிதித்துறை அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று (மார்ச் 15) தாக்கல் செய்து வருகிறார். இந்த பட்ஜெட்டில் எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து காண்போம்.

சுகாதாரத் துறை

>>2018-19ஆம் நிதியாண்டுக்கான நிதி ஒதுக்கீடு - ரூ.11,638.44 கோடி

(முந்தைய நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட நிதி - ரூ.10,158 கோடி)

நடப்பு நிதியாண்டில் நிதி உயர்வு - ரூ.1,480 கோடி.

>>அனைத்து ஊரக வறுமை ஒழிப்புத் திட்டத்திற்கு நிதி - ரூ.519.81 கோடி

>>சத்துணவுத் திட்டத்திற்கு சமூக நலத்துறை வாயிலாக ஒதுக்கப்படும் நிதி - ரூ.5,611 கோடி.

>>முதல்வர் மருத்துவக் காப்பீடு - ரூ.1,361.80 கோடி.

பெண்களுக்கான நலத் திட்டங்கள்

>>திருமண உதவித்தொகை திட்டத்திற்கு - ரூ.724 கோடி

>>நாப்கின் வழங்கும் திட்டம் - ரூ.60.58 கோடி

>>பெண்களுக்கான இருசக்கர வாகன உதவித்தொகை திட்டத்திற்கு - ரூ.250 கோடி

>>டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு நிதியுதவித் திட்டத்திற்கு - ரூ.18,000 கோடி.

(கடந்த நிதியாண்டில் இத்திட்டத்திற்கான நிதி ரூ.12,000 கோடியாக இருந்தது. தற்போது 6,000 கோடி ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது)

கல்வி

>>பள்ளிக்கல்வித் துறைக்கு நிதி ஒதுக்கீடு - ரூ.27,205 கோடி

(2017-18ஆம் நிதியாண்டில் பள்ளிக்கல்வித் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி - ரூ.26,932 கோடி. நடப்பு நிதியாண்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.273 கோடி கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது)

>>மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க ரூ.758 கோடி

>>இடைநிலைக் கல்வி இயக்கத்துக்கு ரூ.3,850 கோடி

>>உயர்கல்வித் துறைக்கு ரூ.4,620 கோடி

>>நபார்டு வங்கி உதவியுடன் பள்ளி உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.200 கோடி.

விவசாயம்

>>வேளாண் துறைக்கான ஒட்டுமொத்த நிதி ஒதுக்கீடு - ரூ.8,196 கோடி

>>2018-19ஆம் நிதியாண்டில் 110 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் உற்பத்தி செய்ய இலக்கு.

(கடந்த நிதியாண்டில் இதன் இலக்கு 100 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்தது)

>>நெல் உற்பத்திக்கான உதவித்தொகை - ரூ.200 கோடி

>>நுண்ணீர் பாசன மேம்பாட்டிற்கு ரூ.3,715 கோடி

>>உழவன் அலைபேசி செயலி உருவாக்கம்

>>கிண்டியில் ரூ.20 கோடியில் பசுமைப் பூங்கா

>>கால்நடைப் பராமரிப்பிற்கு ரூ.1,227.89 கோடி

>>பால்வளத் துறைக்கு ரூ.130.82 கோடி

>>கூட்டுறவு வங்கிகளின் மூலம் பயிர்க்கடன் வழங்கும் திட்டத்திற்கு ரூ.8,000 கோடி

>>கரும்பு விலை நிர்ணயத்திற்கு புதிய முறை காணுதல்.

மீன்வளத் துறை

>>மீன்வளத் துறைக்கான மொத்த நிதி ஒதுக்கீடு - ரூ.1,016 கோடி

>>ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட 177 மீனவர்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

>>ரூ.200 கோடி செலவில் நாகை மாவட்டத்தின் வெள்ளம்பள்ளம் மற்றும்

தரங்கம்பாடியில் மீன்பிடித் துறைமுகம்.

>>ராமநாதபுரம் மாவட்டத்தின் குத்துக்கல்லில் ரூ.3.70 கோடி செலவில் மீன்பிடித்தளம்

>>கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டிணத்தில் மீன் பதப்படுத்தும் பூங்கா.

>>ஆழ்கடல் மீன்பிடி மீனவர்களுக்கு அதிர்வெண் கருவிகள் வழங்குதல்

மற்ற துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள்

>>3 லட்சம் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கு இலக்கு.

>>பேரிடர் நிவாரண நிதியாக ரூ.786 கோடி.

>>வருவாய்த் துறைக்கு ரூ.6,144 கோடி நிதி.

>>நகராட்சி நிர்வாகத் துறைக்கு ரூ.13,986.48 கோடி நிதி.

>>மாற்றுத் திறனாளிகள் நலத்திட்டங்களுக்கு ரூ.545.21 கோடி நிதி.

>>3000 புதிய பேருந்துகள்

>>வீட்டு வசதித் திட்டத்திற்கு ரூ.2,696.14 கோடி நிதி.

>>ஆதி திராவிடர் நலத்துறைக்கு ரூ.3,207 கோடி நிதி.

>>பழங்குடியினர் நலத்துறைக்கு ரூ.333.82 கோடி நிதி

>>நீர்வள ஆதாரத் துறைக்கு ரூ.5,127 கோடி நிதி

>>பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு ரூ.988 கோடி

>>சுற்றுலாத் துறை மேம்பாட்டிற்கு ரூ.173 கோடி

பட்ஜெட் உரையில் பேசிவரும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ்நாட்டின் நிதி வருவாய் 2018-19ஆம் ஆண்டில் 1.76 லட்சம் கோடியாக இருக்கும் எனவும், செலவு ரூ.2.04 லட்சம் கோடியாக இருக்கும் எனவும் கூறியுள்ளார். இதன்மூலம் 2018-19ஆம் ஆண்டில் நிதிப் பற்றாக்குறை ரூ.53,586 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை ரூ.40,736 கோடியாக இருந்தது. மேலும் 2018-19ஆம் நிதியாண்டில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.1 சதவிகிதமாக இருக்குமென்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. அவினாசி - அத்திக்கடவு கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து ரூ.1,789 கோடி செலவில் நிறைவேற்றப்படும் எனவும் பன்னீர்செல்வம் உறுதியளித்துள்ளார்.

வியாழன், 15 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon