மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

ஆவேசப்பட்ட அஜித்: சங்கடத்தில் தயாரிப்பாளர்!

ஆவேசப்பட்ட அஜித்: சங்கடத்தில் தயாரிப்பாளர்!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாக குழு அறிவித்த மார்ச் 1 முதல் புதிய படங்கள் வெளியீடு இல்லை, மார்ச் 16 முதல் அனைத்து திரைப்பட துறை சார்ந்த படப்பிடிப்பு, போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் அனைத்தையும் நிறுத்துவது என்ற இவ்விரண்டு முடிவுகள் பற்றி விளக்கம் கூறவும், உறுப்பினர்கள் கருத்தை கேட்கவும் மார்ச் 12 அன்று மாலையில் கூட்டம் ஒன்றுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.

கூட்டத்தில் தற்போதைய சங்க தலைவர் விஷால் தவிர்த்து முன்னாள் தலைவர்கள் சத்யஜோதி தியாகராஜன், S.A. சந்திரசேகர், கலைப்புலி தாணு மற்றும் மூத்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தியாகராஜன், எடிட்டர் மோகன் தவிர்த்து கூட்டத்தில் பங்கேற்ற 160 உறுப்பினர்களும் என்ன இழப்பு வந்தாலும் திட்டமிட்டபடி வேலை நிறுத்தத்தை நLத்துங்கள் என்று ஒன்றுபட்டு குரல் எழுப்பினார்கள்

அஜித் நடிக்கவுள்ள விஸ்வாசம் படத்திற்கான அரங்குகள் அமைக்கப்பட்டு விட்டன. படப்பிடிப்பு தொடங்கவில்லை என்றால் கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்படும் என அப்படத்தின் தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் முறையிட்டதுடன் படப்பிடிப்பு நடத்த சிறப்பு அனுமதி கேட்டார்.

“தயாரிப்பாளர்கள் நலனுக்காக எடுக்கப்பட்டுள்ள வேலை நிறுத்த முடிவில் பெரியவர் சிறியவர் என்ற பாகுபாடு கூடாது, போராட்டத்தின் போது சில இழப்புகள் வரத்தான் செய்யும்” என பெரும்பான்மையான உறுப்பினர்கள் குரல் கொடுக்க தியாகராஜனும், எடிட்டர் மோகனும் சங்க முடிவுக்கு கட்டுப்படுவதாக உறுதியளித்துள்ளனர்.

இச்சம்பம் பற்றி அறிந்த அஜித், “அனைவரது நலனுக்கான போராட்டத்தில் நமது நலன் மட்டும் பார்ப்பது நியாயம் அல்ல. சங்கத்தின் முன்னாள் தலைவரான நீங்கள் முடிவை அமுல்படுத்த தீவிரமாக உழைக்க வேண்டும். அதைவிடுத்து விஸ்வாசம் படத்திற்கு மட்டும் படப்பிடிப்பு நடத்த சிறப்பு அனுமதி கேட்டது தவறானது” என்று சத்யஜோதி தியாகராஜனிடம் கூறியுள்ளார்.

வியாழன், 15 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon