மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 14 ஜூலை 2020

நடிகரை அறைந்த ராதிகா ஆப்தே

நடிகரை அறைந்த ராதிகா ஆப்தே

தமிழ் சினிமாவில் நடிக்கவந்த புதிதில் தன்னிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட நடிகர் ஒருவரைக் கன்னத்தில் அறைந்ததாகக் கூறியுள்ளார் நடிகை ராதிகா ஆப்தே.

தமிழில் 'தோனி' படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ராதிகா ஆப்தே. அதன் பின்னர் வெற்றி செல்வன், அழகு ராஜா, ரஜினிகாந்த் ஜோடியாக கபாலி என ஒருசில தமிழ் திரைப்படங்களில் நடித்தார். கபாலியில் அவரின் யதார்த்த நடிப்பு தமிழ் ரசிகர்களிடையே அவருக்கு பாராட்டைப் பெற்றுத் தந்தது. தற்போது பாலிவுட் படங்களில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம்வரும் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான பேட்மேன் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

மும்பையில் பிரபல இந்தி நடிகை நேகா தூபியா நடத்தும் நிகழ்ச்சி ஒன்றில் ராதிகா ஆப்தே பங்கேற்றார். அப்போது தமிழ் சினிமாவில் நடிக்கவந்த புதிதில் தனக்கு ஏற்பட்ட விரும்பத்தகாத நிகழ்வு குறித்து அவர் தெரிவித்துள்ளார். அதில் “தமிழ்ப் படம் ஒன்றில் நடிப்பதற்காக முதல் நாள் படப்பிடிப்பின் தளத்துக்குச் சென்றிருந்தேன். அப்போது புகழ்பெற்ற தென்னிந்திய நடிகர் ஒருவர் எனது காலில் கூச்சமூட்டும் உணர்ச்சியை ஏற்படுத்தினார். அவரை நான் அதற்கு முன்பாக சந்தித்துகூட இல்லை. இதனால் அவரது செயலைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். உடனே சட்டென்று அவர் கன்னத்தில் ஓங்கி அறைந்தேன்” என்று கூறியுள்ளார்.

திரையுலகைச் சேர்ந்த நடிகைகளுக்கு பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுக்கும் செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இதற்கு முன்பு பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை வெளிச்சொல்லாத நடிகைகள் தற்போது துணிச்சலாகத் தெரிவித்துவருகின்றனர். அந்த வகையில் ராதிகா ஆப்தே தமிழ் நடிகர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வியாழன், 15 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon