மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 14 ஜூலை 2020

கோவை: உயரும் வேலைவாய்ப்புச் சந்தை!

கோவை: உயரும் வேலைவாய்ப்புச் சந்தை!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்புச் சந்தை பிப்ரவரி மாதத்தில் 23 சதவிகித வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

ஆன்லைன் வேலைவாய்ப்பு தளமான மான்ஸ்டர்.காம், இந்தியாவின் பல்வேறு நகரங்களில் வேலைவாய்ப்பு உருவாக்கம் குறித்த ஆய்வை மேற்கொண்டு அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில், கோயம்புத்தூர் மாவட்டத்தின் பிப்ரவரி மாதத்துக்கான மான்ஸ்டர் வேலைவாய்ப்புக் குறியீடு 2017 பிப்ரவரியை விட 23 சதவிகித வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள அதிகப்படியான தொழில் நிறுவனங்களில் அதிகப்பேர் தொடர்ந்து பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். இந்திய அளவில் வேலைவாய்ப்பு உருவாக்கம் 16 சதவிகிதமாகவே இருக்கிறது. அதேநேரம், சென்னையில் பிப்ரவரி மாதத்தில் வேலைவாய்ப்பு உருவாக்கம் வெறும் 5 சதவிகித வளர்ச்சியை மட்டுமே பெற்றுள்ளது.

இந்தியாவிலேயே அதிகபட்சமாக கொல்கத்தாவில் வேலைவாய்ப்பு உருவாக்கம் 45 சதவிகித வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. பரோடா, அகமதாபாத், சண்டிகர், கொச்சி உள்ளிட்ட நகரங்களும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் கணிசமான வளர்ச்சியைக் கொண்டுள்ளன. துறை வாரியாகப் பார்த்தோமேயானால், உற்பத்தித் துறையில் 59 சதவிகிதமும், சில்லறை வர்த்தகத் துறையில் 13 சதவிகிதமும், வீட்டு உபயோகப் பொருட்கள் துறையில் 59 சதவிகிதமும் கூடுதலான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

வியாழன், 15 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon