மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 14 ஜூலை 2020

காலிறுதியில் ஃபெடரர்

காலிறுதியில் ஃபெடரர்

இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடரில் இன்று (மார்ச் 15) நடைபெற்ற நான்காவது சுற்று ஆட்டத்தில் ரோஜர் ஃபெடரர் வெற்றி பெற்றுக் காலிறுதியில் நுழைந்தார்.

இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், பிரான்ஸ் வீரர் ஜெர்மி சர்தியுடன் மோதினார். முதல் செட்டில் இருவரும் சமமாக விளையாடினர். 7-5 என்ற புள்ளிக் கணக்கில் முதல் செட்டினைக் கைப்பற்றிய ஃபெடரர் இரண்டாவது செட்டில் முதலில் புள்ளிகளை இழக்கத் தொடங்கினார். அதிலிருந்து மீண்ட அவர் 6-4 என்ற செட்களில் இரண்டாவது செட்டையும் கைப்பற்றி வெற்றியடைந்தார்.

இந்த வெற்றியின் மூலம் ஃபெடரர் காலிறுதியில் கொரியாவின் சூங் ஹையோனுடன் மோத உள்ளார். கடந்த ஆண்டு (2017) இறுதியில் நடைபெற்ற ஆஸ்திரேலியா ஓப்பன் தொடரில் இருவரும் அரையிறுதிப் போட்டியில் சந்தித்தனர். அதில் முதல் செட்டினை ஃபெடரர் 6-1 எனக் கைப்பற்றினார். இரண்டாவது செட்டில் விளையாடும் பொழுது காலில் ஏற்பட்ட காயத்தால் விளையாட முடியாமல் சூங் ஹையோன் வெளியேறினார். எனவே ஃபெடரர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் இந்த முறை இருவரும் மோத உள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

21 வயதான சூங் ஹையோன்யினால் அனுபவமுள்ள ரோஜர் ஃபெடரரைச் சமாளிக்க முடியுமா எனப் பொறுத்திருந்து பார்ப்போம்.

வியாழன், 15 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon