மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 14 ஜூலை 2020

ரூ.8.47 லட்சத்துக்கு வாழைக்காய் ஏலம்!

ரூ.8.47 லட்சத்துக்கு வாழைக்காய் ஏலம்!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் மார்ச் 14ஆம் தேதி நடந்த ஏலத்தில் ரூ.8,47,950க்கு பல்வேறு வகையான வாழைக் காய்கள் விற்பனையாகியுள்ளதாக கோபிசெட்டிபாளையம் கூட்டுறவுச் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கோபிசெட்டிபாளையம் கூட்டுறவு சங்கத்தின் பொது மேலாளர் நமது மின்னம்பலத்திடம் பேசுகையில், “சேலம், கோயம்புத்தூர், திருப்பூர், கோபிசெட்டிபாளையம் ஆகிய பகுதிகளிலிருந்து 39 வியாபாரிகள் இச்சந்தையில் வாழைக்காய் விற்பனைக்காக வந்திருந்தனர். மொத்தம் ரூ.8,47,950க்கு வாழைக்காய்கள் விற்பனையாகியுள்ளன” எனத் தெரிவித்தார்.

இச்சந்தையில் மொத்தம் 5,631 வாழைத் தார்கள் விற்பனைக்காகக் கொண்டுவரப்பட்டிருந்தன. அதில் கதளி வாழை கிலோ ஒன்றுக்கு ரூ.15 ஆகவும், நேந்திரம் வாழை கிலோ ஒன்றுக்கு ரூ.26 ஆகவும் விற்பனையானது. பூவன் வாழைத் தார் ஒன்றுக்கு ரூ.680, மொந்தன் வாழைத் தார் ஒன்றுக்கு ரூ.430 ஆகவும், ரஸ்தாளி தார் ஒன்றுக்கு ரூ.1,090 ஆகவும், ரொபஸ்டா தார் ஒன்றுக்கு ரூ.430 ஆகவும், பச்சை நாடா தார் ஒன்றுக்கு ரூ.470 ஆகவும் விற்பனையானது.

வியாழன், 15 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon