மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

ரஞ்சித் படத்தில் தினேஷ்

ரஞ்சித் படத்தில் தினேஷ்

பா.ரஞ்சித் தயாரிப்பில் தினேஷ் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பா.ரஞ்சித் இயக்குநராக அறிமுகமான அட்டகத்தி திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் தினேஷ். சிறிய வேடங்களில் நடித்துவந்த அவர் அதற்குப் பின் ‘அட்டகத்தி’ தினேஷ் என்று அழைக்கப்படும் அளவுக்கு அந்தப் படம் அவரது திரைப்பயணத்தில் முக்கியமான படமாக அமைந்தது. அதன் பின் பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விசாரணை, ரஞ்சித் இயக்கிய கபாலி ஆகிய படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் பெற்றார்.

ரஞ்சித் தனது நீலம் புரொடக்‌ஷன் சார்பில் தயாரிக்கும் புதிய படத்தை அறிமுக இயக்குநர் அதியன் இயக்குகிறார். இவர் ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். தற்போது ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள பரியேறும் பெருமாள் வெளியீட்டிற்குத் தயாராகியுள்ள நிலையில் வேலை நிறுத்தம் காரணமாகத் தள்ளிப்போயுள்ளது. இதன் வெளியீட்டிற்குப் பின் தினேஷ் நடிக்கும் புதிய படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வியாழன், 15 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon