மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

பியூட்டி பிரியா

பியூட்டி பிரியா

திருமணம் ஆனாலே பலர் அழகை பற்றி கவலைப்படுவதில்லை. முக்கியமாக குழந்தை பிறந்துவிட்டால் உடல் பருமனாகிவிடும், அழகும்போய்விடும், குழந்தை ஓரளவு வளர்ந்த பின்புதான் அவற்றைப் பற்றி கவலைப்பட வேண்டும் என்று முன் கூட்டியே பெண்கள் ஒரு தவறான கணக்கை போட்டுக்கொள்கிறார்கள். ஆனால் தோழி காயத்ரியிடம் பேசிக்கொண்டிருந்த போது கர்ப்ப காலத்திலேயே அழகு அவசியம் என்று கூறினார். அவற்றை பற்றி தெரிந்து கொள்ளலாம்

இயந்திரங்களின் உதவியின்றி கைகளால் செய்யப்படும் "பேஷியலை' கர்ப்ப காலத்தில் செய்துகொள்வதே சிறந்தது. மேலும் ஆப்பிள், ஆரஞ்சு மற்றும் வாழைப்பழம் சமஅளவு எடுத்து, கூழ் போன்று அரைத்துகொள்ள வேண்டும். இதை முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவி, பதினைந்து நிமிடம் கழித்து கழுவினால், முகம் பளிச்சென்று இருக்கும்.

சிலருக்கு கர்ப்ப காலத்தில் முடி உதிருதல் பிரச்னை இருக்கும்.

அதற்கு புரோட்டீன், இரும்புசத்து, சுண்ணாம்பு சத்து மற்றும் வைட்டமின் "ஏ' போன்ற சத்துக்கள் குறைபாடே காரணம். எனவே, கர்ப்பகாலத்தில் இச்சத்துகள் நிறைந்த உணவு பொருட்களை அதிகளவில் சேர்த்து கொண்டால்,முடி உதிருதல் குறையும். மேலும், சிசுவும் ஆரோக்கியமுடன் வளரும்.

கர்ப்ப காலத்தில் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாறுபாட்டினால், கை, கால்களில் தேவையில்லாத முடிகளின் வளர்ச்சி அதிகம் இருக்கும். வேப்பங் கொழுந்தை கிள்ளி, அதனுடன் தண்ணீர் சேர்த்து அரைத்து, முடி இருக்கும் பகுதிகளில் தடவினால், முடிகள் உதிர்ந்து விடும். கர்ப்பிணி பெண்கள் பக்க விளைவுகள் எதுவும் இல்லாத, அழகு சிகிச்சை முறைகளை மேற்கொள்வதன் மூலம், கருவில் இருக்கும் சிசுவும் ஆரோக்கியமுடன் வளரும்.

வியாழன், 15 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon