மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

வேளாண் ஏற்றுமதிக்குத் தனி சரக்கு விமானம்!

வேளாண் ஏற்றுமதிக்குத் தனி சரக்கு விமானம்!

இந்தியாவில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் விதமாக, தனி சரக்கு விமானச் சேவை கொள்கை திட்டம் செயல்படுத்தப்படும் என்று மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சரான சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.

டெல்லியில் மார்ச் 13ஆம் தேதி நடந்த சர்வதேச உணவு பதப்படுத்துதல் மற்றும் விருந்தோம்பல் மாநாட்டில் சுரேஷ் பிரபு பேசுகையில், “விவசாயிகள் உற்பத்தி செய்யும் வேளாண் பொருட்கள் மிக விரைவாகச் சந்தையை அடைய வேண்டும். அதற்கான செயல்திட்டத்தை உருவாக்கும்படி விமான போக்குவரத்து துறை அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கிறேன். வேளாண் பொருட்கள் ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கான வரைவுக் கொள்கை ஒன்று தயாராகியுள்ளது. இதன் மூலம் வேளாண் பொருட்கள் விரைவில் சந்தையை அடையும்.

வேளாண் துறையுடன் விருந்தோம்பல், சுற்றுலா, தகவல் தொழில்நுட்பம் உட்பட 12 முக்கிய துறைகளின் வளர்ச்சிக்கும் செயல்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை அளித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் தனி நிதியம் ஏற்படுத்தப்படும். ஒவ்வொரு துறை வாரியாக வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, ஒவ்வொரு துறை வளர்ச்சிக்கும் ஒருங்கிணைந்த திட்டம் செயல்படுத்தப்படும்” எனத் தெரிவித்தார்.

வியாழன், 15 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon