மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

முதல்வர்தான் உண்மையான சூப்பர் ஸ்டார்!

முதல்வர்தான் உண்மையான சூப்பர் ஸ்டார்!

முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் உண்மையான சூப்பர் ஸ்டார் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி புகழ்ந்துள்ளார்.

நடிகர்கள் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யத்தை ஆரம்பித்து கட்சியைப் பலப்படுத்தும் பணிகளை செய்து வருகிறார். ரஜினிகாந்த் விரைவில் கட்சி ஆரம்பிக்க உள்ளார். மேலும் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள தலைவர் வெற்றிடத்தை தான் நிரப்புவேன் என்றும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

நடிகர்கள் கட்சி ஆரம்பித்துள்ள இந்த நிலையில் சென்னை கோடம்பாக்கத்தில் நேற்று ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் பேசிய உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி, "உண்மையான சூப்பர் ஸ்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய சூப்பர் ஸ்டார்கள் அரசியலுக்கு வந்துவிட்டனர். ஆனால் சினிமாவில் நினைப்பதுபோன்றே மக்கள் தங்களை நினைப்பார்கள் என்று இருவரும் நினைக்கின்றனர்" என்று குறிப்பிட்ட அவர், தமிழகத்தின் உண்மையான சூப்பர் ஸ்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான். அதனை யாரும் மறுக்க முடியாது. ஏனென்றால், முதல்வர் தினந்தோறும் 12 மணி வரை மக்களை சந்திக்கிறார். தினமும் கோட்டைக்கு செல்கிறார். மேலும் கடந்த ஒரு வருடமாக இந்த ஆட்சி இப்போது முடியும், அப்போது முடியும் என்று கூறுகின்றனர். ஆனால் அதையெல்லாம் புறந்தள்ளி ஒரு வருடகாலம் சிறப்பாக ஆட்சியை நடத்தியுள்ளார்" என்று குறிப்பிட்டார்.

வியாழன், 15 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon