மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 14 ஜூலை 2020

வீட்டிலிருந்து தகவல் அனுப்பும் கூகுள்!

வீட்டிலிருந்து தகவல் அனுப்பும் கூகுள்!

கூகுள் நிறுவனம் கூகுள் அசிஸ்டெண்ட் வசதி மூலம் பயனர்களுக்குத் தேவையான தகவலை வீட்டில் இருந்தபடியே நினைவூட்டும் வசதியை கண்டறிந்துள்ளது.

வீட்டிலிருக்கும் அனைத்து டிஜிட்டல் கருவிகளையும் கூகுள் நிறுவனத்தின் ஸ்மார்ட் அசிஸ்டெண்ட்டுடன் இணைத்து வாய்ஸ் கமான்ட் மூலம் அதனைக் கட்டுப்படுத்த முடியும். பயனர்களுக்குத் தேவையான தகவல்களைத் தேடுவதற்கும் இந்த கூகுள் அசிஸ்டெண்ட் கருவிகள் பயன்படும். பயனர்கள் ரிமைன்டர்களைப் பதிவிட்டு வைத்துக்கொள்ள இதில் வாய்ஸ் கமான்ட் பயன்படுத்தினால் போதுமானது.

ஆனால் இவை அனைத்தும் பயனர்கள் வீட்டில் இருக்கும் வேளையில் மட்டும் செயல்படும் வகையில் இருந்தன. தற்போது புதிய வசதி ஒன்றினை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி ஒரு இடத்தைக் குறிப்பிட்டு பயனர்கள் அவர்களது ரிமைன்டர்களை இந்தக் கருவியில் பதிவிட்ட பின்னர் வெளியே எங்கு சென்றாலும், அந்த இடத்தை நெருங்கியதும் ரிமைன்டர்கள் இணையதளம் மூலம் பகிரப்பட்டுப் பயனர்களுக்கு நினைவூட்டப்படுகின்றன.

பயனர்கள் இந்த வசதியைத் தங்களது மொபைல் போன்களில் பயன்படுத்தும் வசதியை கூகுள் நிறுவனம் இதற்கு முன்னரே அறிமுகம் செய்திருந்தது. ஒரு இடத்திற்குச் சென்றதும் அங்கு மேற்கொள்ள வேண்டிய செயல்களைப் பயனர்களுக்கு நினைவூட்ட இந்த வசதி பயனுள்ளதாக இருந்துவருகிறது.

வியாழன், 15 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon