மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

பாலிவுட் ரீமேக்கில் விக்ரம் வேதா

பாலிவுட் ரீமேக்கில் விக்ரம் வேதா

விஜய் சேதுபதி, மாதவன் இணைந்து நடித்த விக்ரம் வேதா திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் தற்போது இந்தியில் ரீமேக்காக உள்ளது.

கேங்ஸ்டர் கதையில் உருவாகிய விக்ரம் வேதா வித்தியாசமான திரைக்கதை மூலமும் மிகையில்லாத நடிப்பாலும் ரசிகர்களை ஈர்த்தது. புஷ்கர்-காயத்ரி இணைந்து இயக்கிய இந்தப் படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ் சார்பில் சசிகாந்த் தயாரித்தார். இப்படம் இந்தியில் ரீமேக்காக உள்ள நிலையில் முதன்முறையாக இயக்குநர்கள் இருவரும் இந்தியில் அறிமுகமாகவுள்ளனர்.

ஏற்கனவே மாதவன் நடித்த இறுதிச்சுற்று படத்தைத் தயாரித்த ஒய் நாட் ஸ்டுடியோஸ் இந்தியிலும் ரீமேக் செய்தது. அதைத் தொடர்ந்து இந்தியில் ‘சுப் மங்கள் சாவதன்’ படத்தைத் தயாரித்தது. தற்போது மூன்றாவது முறையாக இந்தியில் களம் காணும் ஒய் நாட், ரிலையன்ஸ் நிறுவனத்துடனும் நீரஜ் பாண்டேவின் சி ஸ்டுடியோஸ் உடனும் இணைந்து தயாரிக்கிறது.

நீரஜ் பாண்டே இணை தயாரிப்பாளராகப் பணியாற்றுவதுடன் இந்தியில் திரைக்கதை வசனமும் எழுத உள்ளார்.

வியாழன், 15 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon