மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 21 ஜன 2021

காமெடிக் கூட்டணியில் ரம்யா நம்பீசன்

காமெடிக் கூட்டணியில் ரம்யா நம்பீசன்வெற்றிநடை போடும் தமிழகம்

சத்யா படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் ரம்யா நம்பீசனின் ‘நட்புன்னா என்னானு தெரியுமா’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது.

சிபிராஜுக்கு ஜோடியாக சத்யா படத்தில் நடித்த ரம்யா நம்பீசன், நட்புன்னா என்னானு தெரியுமா, பிரபு தேவாவின் மெர்குரி, விஜய் சேதுபதியின் சீதக்காதி ஆகிய படங்களில் நடிக்க ஒப்பந்தமானார். இதில் அவர் கதாநாயகியாக நடித்திருக்கும் நட்புன்னா என்னானு தெரியுமா திரைப்படம் வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளது. இதன் ட்ரெய்லர் நேற்று (மார்ச் 14) மாலை வெளியானது.

முழுக்க காமெடி என்டர்டெயினராக உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் அனைவரையும் கவர்ந்த கவின் கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கிறார். மூன்று நண்பர்களைப் பற்றிய கதையாக உருவாகியிருக்கும் இதில் அருண்ராஜா காமராஜ், ராஜு ஜெயமோகன் இருவரும் கவினின் நண்பர்களாக நடித்திருக்கிறார்கள்.

இந்த ட்ரெய்லரில் இடம்பெற்றிருக்கும் காட்சிகளையும், வசனங்களையும் பார்க்கும்போது முழுக்க காமெடி கலந்த காதல் படமாக இருக்குமெனக் கருத முடிகிறது. ரம்யா நம்பீசனை கவினின் நண்பர் காதலிக்க, அவனுக்குத் தெரியாமல், அவனிடம் சொல்ல வேண்டாமென ரம்யாவிடன் கூறி அவரைக் காதலிக்கிறார் கவின். ஒருகட்டத்தில் கவின் - ரம்யா இருவரும் காதலிப்பது நண்பனுக்குத் தெரியவந்து அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டு, பின்னர் சேர்ந்துகொள்வதாகக் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. ஒரு பெண்ணுக்காக இருவர் மோதிக்கொள்வதைக் காமெடி கலந்த காதல் கதையாக இயக்குநர் சிவகுமார் சொல்லியிருப்பாரென என யூகம் எழுகிறது.

காமெடி ஜானரில் உருவாகியிருக்கும் இந்தப் படம் ரம்யாவுக்கும், கவினுக்கும் வெற்றிப்படமாக அமையுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

நட்புன்னா என்னானு தெரியுமா ட்ரெய்லர்

புதன், 14 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon