நேரமும் வாய்ப்பும் எல்லோருக்கும் எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கின்றன. முயற்சி எடுத்தவர்கள் மட்டுமே தாங்கள் நினைத்ததை அடைகின்றனர்.
- ஜேம்ஸ் ஆலன் (28 நவம்பர் 1864 - 24 ஜனவரி 1912). ஆங்கில தத்துவ எழுத்தாளர், சுய முன்னேற்றம் மற்றும் உத்வேகம் அளிக்கும் புத்தகங்கள் எழுதுவதில் வல்லவர். இவர் பத்திரிகை துறையில் பணியாற்றும்போது எழுதுவதில் ஆர்வம் ஏற்பட்டதால், 1902இல் ‘வறுமையிலிருந்து பலத்துக்கு’ என்ற முதல் படைப்பை வெளியிட்டார். 1903இல் இவர் எழுதிய ‘ஒரு மனிதனின் சிந்தனையில்’ என்ற புத்தகம் சுய முன்னேற்றம் சார்ந்து உத்வேகம் அளித்துப் பல எழுத்தாளர்களை ஊக்குவித்தது; இவருக்குப் பெருமையைத் தேடித் தந்தது.