மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

சிரியா: போரின் வலி பேசும் ஓவியங்கள்!

சிரியா: போரின் வலி பேசும் ஓவியங்கள்!

சிரியாவில் நடைபெற்றுவரும் போரின் கொடுமைகளை சமூக வலைதளங்களில் வெளியாகும் புகைப்படங்கள் உணர்த்துகின்றன. குழந்தைகளின் அழுகையும் மரணமும் காண்போரை துடிக்கச் செய்யும் அந்தப் புகைப்படங்கள் சிரியாவில் போரை நிறுத்தச் சொல்லி சர்வதேச மக்களை குரல் எழுப்ப வைத்துள்ளது.

​​​

சிரியாவின் தற்போதைய நிலையினை பிரதானப்படுத்தும் வகையில் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் ஒரு கோட்டோவியத் தொடரை வரைந்திருக்கிறார். இது குறித்து அவரை நாம் தொடர்புகொண்டு கேட்டபோது, “தொடர்ச்சியாக வெளியாகும் சிரியாவின் போர் புகைப்படங்கள் பெரும் வலியை ஏற்படுத்தியுள்ளன. இதை ஓவியத்தில் பதிவு செய்ய எண்ணி இந்தத் தொடரைத் தொடங்கியுள்ளேன். மிக்ஸ்டு மீடியா ஒர்க் என்று சொல்லக்கூடிய புகைப்படத்தையும் கோட்டோவியத்தையும் இணைத்து இதை உருவாக்குகிறேன்” என்று கூறினார்.

ஸ்ரீதர் உலகம் முழுவதும் 64 ஓவியக் கண்காட்சிகளை வைத்துள்ளார். அப்துல் கலாம் அருங்காட்சியகம் உட்பட 23 அருங்காட்சியகங்களை உருவாக்கியுள்ளார். இதற்கு முன்னர் சென்னை பெரு வெள்ளத்தை மையமாக வைத்து தொடர் ஓவியங்கள் வரைந்தார். ஜல்லிக்கட்டு போராட்டத்தையும் ஓவியத்தில் பதிவு செய்துள்ளார்.

சிரியா போர் குறித்து தொடர்ச்சியாக வரைந்துகொண்டிருக்கும் அவர் கண்காட்சி குறித்து இன்னும் திட்டமிடவில்லை என்று கூறியுள்ளார்.

புதன், 14 மா 2018

chevronLeft iconமுந்தையது