மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 14 ஜூலை 2020

தர்மபுரி: வெங்காயம் விலை சரிவு!

தர்மபுரி: வெங்காயம் விலை சரிவு!

தர்மபுரி மாவட்டச் சந்தையில் உள்ளூர் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வரும் வெங்காய வரத்து அதிகரித்ததால் பெரிய வெங்காயத்தின் விலை பெருமளவில் குறைந்துள்ளது.

தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீரைக் கொண்டு பெரிய வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. பொதுவாகப் பெரிய வெங்காயம் ரூ.60 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. உற்பத்தி அதிகரித்துள்ளதால் கடந்த மாதம் ஒரு கிலோ வெங்காயம் ரூ.23லிருந்து ரூ.30வரை விலை குறைந்தது. இதனால் விவசாயிகள் வரும் நாட்களில் விலை அதிகரிக்கும் எனக் கருதி அதிகளவு வெங்காயங்களை இருப்பில் வைத்தனர்.

ஆனால் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா மாநிலம் பெல்லாரி பகுதியில் வெங்காய விளைச்சல் அதிகரித்ததால் சந்தையில் அதன் வரத்தும் அதிகரித்தது. இதன் விளைவாக வெங்காயத்தின் விலை மேலும் குறைந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி ஒரு கிலோ பெரிய வெங்காயம் விவசாயிகளிடம் 13 ரூபாய்க்கு வாங்கப்பட்டு, சந்தையில் ரூ.18க்கு விற்கப்படுகின்றது. இது விவசாயிகளைப் பெரிதும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

புதன், 14 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon