மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 14 ஜூலை 2020

சினிமாவுக்கு வரும் பி.வி.சிந்து?

சினிமாவுக்கு வரும் பி.வி.சிந்து?

உலகப் புகழ்பெற்ற பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தெலுங்குப் படத்தில் நடிக்கவுள்ளதாக வெளியான செய்திகளுக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

பேட்மிண்டன் விளையாட்டில் சாதனை படைத்து வருபவர் பி.வி.சிந்து. இவர் பிரபல பேட்மிண்டன் வீரரும் பயிற்சியாளருமான கோபிசந்தின் விளையாட்டை பார்த்து உத்வேகம் கொண்டு, தனது 8 வயது முதல் விளையாட ஆரம்பித்தார். பேட்மிண்டன் விளையாட்டில் தொடர்ந்து சாதனை படைத்த இவருக்கு ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம், பத்மஸ்ரீ விருது, அர்ஜுனா விருது, ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது உட்பட பல விருதுகள் பெற்றிருக்கிறார்.

தெலுங்குப் சினிமாவுலகில் பி.வி.சிந்துவிற்கு நண்பர்கள் பலர் உள்ளனர். தனக்கு நடிகர் பிரபாஸை பிடிக்கும் என வெளிப்படையாகக் கூறிய சிந்து, தனக்கு அனுஷ்காவுடன் நல்ல உறவு இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது அவர் தெலுங்கில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து ஸிஃபி இணையதளத்திற்கு அவருக்கு நெருக்கமான நண்பர்கள் அளித்துள்ள பேட்டியில், “சிந்துவிற்கு அத்தகைய திட்டங்கள் எதுவும் இல்லை. அவர் நடிப்பில் ஆர்வம் காட்ட விரும்பவில்லை. பேட்மிண்டனில் அதிகமான கோப்பைகளை வென்று தனது நாட்டிற்குப் பெயர் மற்றும் புகழைப் பெற்றுத்தருவதே அவரது குறிக்கோள்” எனத் தெரிவித்துள்ளனர்.

புதன், 14 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon