மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

தவற்றைச் சரிசெய்து வெற்றிகண்ட கிடாம்பி

தவற்றைச் சரிசெய்து வெற்றிகண்ட கிடாம்பி

ஆல் இங்கிலாந்து ஓப்பன் பேட்மிண்டன் தொடரில் முதல் நாள் ஆட்டத்தில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிடாம்பி வெற்றி பெற்றார்.

ஆல் இங்கிலாந்து ஓப்பன் பேட்மிண்டன் தொடர் நேற்று (மார்ச் 14) இங்கிலாந்தில் தொடங்கியது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிடாம்பி, பிரான்ஸ் நாட்டின் ப்ரைஸ் லெவெர்டெஸ் உடன் மோதினார். முதல் செட்டில் ஸ்ரீகாந்த் அடித்த பந்துகள் அனைத்தும் அவே புள்ளிகளிலேயே விழுந்தது. எதிரணி வீரர் சேர்த்த புள்ளிகளை விட ஸ்ரீகாந்த் அடித்த அவே புள்ளிகள் தான் அதிகம் இருந்தன. எனவே முதல் செட்டினை 21-7 என்ற புள்ளிக்கணக்கில் ப்ரைஸ் லெவெர்டெஸ் கைப்பற்றினார்.

அதன்பின்னர் கிடாம்பி தவறினை உணர்ந்து சரியே விளையாடத் தொடங்கினார். முதல் செட் தோல்வியைத் தவிர்க்க சிறப்பாக விளையாடிய அவர் இரண்டாவது மற்றும் மூன்றாவது செட்டினை தொடர்ச்சியாக 21-14, 22-20 என்ற நேர் செட்களில் கைப்பற்றி வெற்றியைத் தட்டிச் சென்றார். மூன்றாவது செட்டில் இருவரும் சமபலம் கொண்டு விளையாடியதால் நீண்ட நேரம் இந்த செட் நடைபெற்றது. இருப்பினும் ப்ரைஸ் லெவெர்டெஸ் இறுதியில் போராட முடியாமல் ஸ்ரீகாந்திடம் சரணடைந்தார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து தாய்லாந்து வீரர் சோச்சுவோங் உடன் பலபரிட்சை நடத்தினார். அதில் முதல் செட்டினை 22-20 என பி.வி.சிந்து இழந்தாலும், 21-17, 21-9 என்ற நேர் செட்களில் அடுத்த இரண்டு செட்களை கைப்பற்றி வெற்றி பெற்றார்.

மற்றொரு பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சாய்னா நேவால் தாய்வான் வீராங்கனை யிங் டை உடன் மோதினார். அதில் யிங் டை 21-14, 21-18 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார். எனவே சாய்னா முதல் சுற்றிலே தோல்வியடைந்து வெளியேறி ஏமாற்றமளித்தார்.

வியாழன், 15 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon