மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 14 ஜூலை 2020

பாலிவுட்டின் பாகுபலியா ‘பானிபட்’?

பாலிவுட்டின் பாகுபலியா ‘பானிபட்’?

வரலாற்று சம்பவங்களை அடிப்படையாக உருவாகிவரும் படங்களுக்கு நல்ல வரவேற்பு உருவாகி வருகிறது. பாகுபலி, பத்மாவத் என பல படங்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இந்நிலையில் பாலிவுட்டில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் பானிபட் படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

பாலிவுட் இயக்குநர் அஷுடோஷ் கோவரிகர் இயக்கத்தில் உருவாகவிருக்கும் ‘பானிபட்’ திரைப்படம் மூன்றாவது பானிபட் போரை மையப்படுத்தி உருவாகவுள்ளது. இப்படத்தில் அர்ஜுன் கபூர், சஞ்சய் தத், க்ரித்தி சனோன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.

‘விஷன் வேர்ல்ட்’ நிறுவனத்துடன் இணைந்து இயக்குநர் அஷுடோஷ் கோவரிகரே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘அஷுடோஷ் கோவரிகர் புரொடக்ஷன்ஸ்’ மூலம் பிராம்மண்டாமாக தயாரிக்கிறார். படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில், அஷுடோஷ் கோவரிகர் தனது ட்விட்டர் பக்கத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நேற்று (மார்ச் 14) வெளியிட்டுள்ளார். படத்தை அடுத்த ஆண்டு (2019) டிசம்பர் 6ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். பாகுபலி, பத்மாவத் போன்று வசூல் சாதனை புரியுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

வியாழன், 15 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon