மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

முஸ்லிம் பெண்களுக்கு மகளிர் விடுதி!

முஸ்லிம் பெண்களுக்கு மகளிர் விடுதி!

வேலைக்குச் செல்லும் முஸ்லிம் பெண்களுக்கு சென்னை வக்ஃபு வாரிய இடத்தில் அரசு நிதி உதவியுடன் மகளிர் விடுதி கட்டப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டபேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று (மார்ச் 15) தொடங்கியது. துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 2018-19ஆம் ஆண்டுக்கான தமிழக நிதி நிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார்.

அதில், வேலைக்குச் செல்லும் முஸ்லிம் பெண்களுக்காக அரசு நிதியுதவியுடன் மகளிர் விடுதி கட்டப்படும். சென்னை வஃக்பு வாரியத்திற்குச் சொந்தமான இடத்தில் விடுதி கட்டப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வக்ஃபு வாரியத்துக்கான ஆண்டு மானியத் தொகை ஒரு கோடி ரூபாயில் இருந்து 2 கோடி ரூபாயாக உயர்வு, கிறிஸ்தவ தேவாலயங்களைப் பராமரித்துப் புதுப்பிக்கும் திட்டம் உள்ளிட்ட சிறுபான்மையினர் நலன் சார்ந்த அறிவிப்புகள் கடந்த நிதியாண்டுகளில் அறிவிக்கப்பட்டதாக பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

மேலும், தமிழக அரசின் வருவாய் ரூ. 1.81 லட்சம் கோடி, செலவு ரூ. 2. 04 லட்சம் கோடி, பற்றாக்குறை ரூ. 23 ஆயிரத்து 176 கோடி என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வியாழன், 15 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon