மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 14 ஜூலை 2020

அரசு வேலை பெற ராணுவத்தில் பணி கட்டாயம்!

அரசு வேலை பெற ராணுவத்தில் பணி கட்டாயம்!

அரசுப் பணியில் சேருவதற்கு ஒருவர் ஐந்து ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றியிருக்க வேண்டும் என நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

இந்திய ராணுவத்தில் 7 ஆயிரம் அதிகாரிகள், சுமார் 20 ஆயிரம் வீரர்கள் பற்றாக்குறை உள்ளது. இந்திய விமானப்படையில் 150 அதிகாரிகள், சுமார் 15 ஆயிரம் வீரர்கள் மற்றும் கடற்படையில் 150 அதிகாரிகள், 15 ஆயிரம் வீரர்கள் பற்றாக்குறையாக உள்ளது என நாடாளுமன்ற நிலைக்குழு சுட்டிக் காட்டியுள்ளது.

இந்நிலையில், கெசட்டட் ஆபீசர்ஸ் என்ற மேல்நிலை அரசு வேலையில் சேர விரும்புவோர் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றியிருக்க வேண்டும் என்ற விதிமுறையை அமல்படுத்த நிலைக்குழு பரிந்துரை செய்தது. இதன் மூலம் ராணுவத்தில் ஏற்பட்டுள்ள ஆட்கள் பற்றாக்குறையைத் தீர்க்க முடியும் என்றும் அரசு ஊழியர்களுக்கான திட்டங்களை வகுக்கும் மத்திய பயிற்சி அமைப்புகள் இந்தப் பணியை மேற்கொள்ளலாம் என்றும் அந்தக் குழு தெரிவித்துள்ளது.

மத்திய அரசுப் பணிகளில் 30 லட்சம் பேரும், மாநில அரசுப் பணிகளில் 2 கோடி பேரும் பணியாற்றுகின்றனர். கட்டாய ராணுவ சேவை மூலமே ராணுவத்தில் தன்னிறைவு பெற முடியும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாழன், 15 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon