மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 மா 2018

வெனிசுலா - இந்தியா: ஆயில் இறக்குமதி சரிவு!

வெனிசுலா - இந்தியா: ஆயில் இறக்குமதி சரிவு!

வெனிசுலா நாட்டிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்யின் அளவு கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்குச் சரிவைச் சந்தித்துள்ளது.

2017ஆம் ஆண்டின் நவம்பர் மாதம் முதல் 2018ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதம் வரையில் வெனிசுலா நாட்டிலிருந்து இந்தியா நாள் ஒன்றுக்குச் சராசரியாக 3 லட்சம் பேரல்கள் அளவிலான கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்துள்ளது. இது சென்ற ஆண்டை விட 20 சதவிகிதம் குறைவாகும். மேலும், இந்த அளவானது 2012ஆம் ஆண்டுக்குப் பிறகு கச்சா எண்ணெய் இறக்குமதியில் இந்தியா சந்திக்கும் மிகப்பெரிய சரிவாகும். கடந்த சில ஆண்டுகளாகவே வெனிசுலா நாட்டில் கச்சா எண்ணெய் உற்பத்தியில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாகவே இந்தியாவின் இறக்குமதியில் சரிவு ஏற்பட்டிருப்பதாக மத்திய கப்பல் மற்றும் எண்ணெய் துறை புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

வெனிசுலா நாட்டின் எண்ணெய் உற்பத்தி குறைந்தது மட்டுமல்லாமல் பிற நாடுகளுக்கு வெனிசுலா தர வேண்டிய கடன் தொகைக்கு ஈடாக எண்ணெய் விநியோகம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டதாலும் வெனிசுலாவின் இந்தியாவுக்கான எண்ணெய் ஏற்றுமதி குறைந்துவிட்டதாக ரிசோர்ஸ் எக்கனாமிஸ்ட் ஆலோசனை நிறுவனத்தின் கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பொருட்கள் பிரிவின் இயக்குநரான எஷன் அல் ஹக், ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 13 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon