மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 மா 2018

மெஸேஜ் அனுப்புறீங்களா, மர்டர் பண்றீங்களா? -அப்டேட் குமாரு

மெஸேஜ் அனுப்புறீங்களா, மர்டர் பண்றீங்களா? -அப்டேட் குமாரு

நியூஸ் வரிசையா பாத்துக்கிட்டே வந்தேன். ஒரு நியூஸைப் பாத்ததும் சட்டுனு மொபைல் எடுத்து என் கேர்ள் பிரெண்டுக்கு ஒரு மெஸேஜ் போட்டேன். அன்பே ஜில்லு, ராத்திரில நான் மெஸேஜ் சவுண்டு கேட்டு, அது எங்கிட்ட இருந்து வந்ததா நினைச்சு தூக்கத்தை கலைச்சு எழுந்து பாத்து, ஏமாந்து போய், எனக்கு ஃபோன் போட்டு, நைட்ல மெஸேஜ் அனுப்பி உசுர வாங்குறானுங்கன்னு கம்ப்ளைண்ட் பண்ணி என் தூக்கத்தையும் சேர்ந்து கெடுப்பியே. அதுக்கு விடிவுகாலம் பொறந்துடுச்சி. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வர்ற வரைக்கும் ஆதார் கார்டு அட்டாச் பண்ணிக்கலாம். மார்ச் 31ஆம் தேதி கடைசி நாள் இல்லைன்னு சொல்லிட்டாங்களாம்னு அனுப்பியிருக்கேன். ஒன்னு ஆதாருக்கு விடிவுகாலம் பொறக்கணும், இல்லைன்னா இந்த ரிலேஷன்ஷிப்புக்கு விடிவுகாலம் பொறக்கணும். இந்தமாதிரி மெஸேஜ் வர்றதுல்லாம் எவ்வளவு கொடுமைன்னா, மிஸ்டு கால் குடுத்து கட்சில ஆள் சேர்த்த தமிழிசை மேடத்தையே, கமலுடைய மக்கள் நீதி மய்யத்துல அட்டாச் பண்ணியிருக்காங்களே, அந்தளவுக்கு கொடுமை. அப்டேட்டைப் படிங்க. என் மெஸேஜுக்கு ரியாக்‌ஷன் என்னன்னு பாத்துட்டு வர்றேன்.

Abdul Hameed Sheik Mohamed

கமல் கட்சியின் மக்கள் நீதி மய்யம் உறுப்பினர் சேர்க்கையில் மோசடி நடந்துள்ளது. என்னையே உறுப்பினராக சேர்த்திருப்பதாக எனக்கு மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார்கள். - தமிழிசை செளந்தர்ராஜன்

மிஸ்டுகால் மூலம் நீங்கள் சேர்த்த அந்த ஐம்பது இலட்சம் உறுப்பினர்கள் இப்போ மய்யத்தில் இருப்பதாக தகவல்

வாசுகி பாஸ்கர்

“பொம்பளை புள்ளைங்களுக்கு என்ன ட்ரெக்கிங் வேண்டி கிடக்கு?”

மலையேற “காலு” மட்டும் போதும்

தீரன் விஜயவர்மன்

தீர்த்தம்னு சொல்லி மாட்டு மூத்திரத்தை குடிக்க வச்சிட்டிங்களேடா.. இனி வாழ்க்கையில தீர்த்தமே குடிக்க கூடாது.

பிகு: மாட்டு மூத்திரம்னு தெரிஞ்ச பின்னாடி தான் ஒரே வாமிட்டிங்கா இருக்கு

Shan Karuppusamy

நெருப்பு என்பது பெரும்பாலும் களவுகளை மறைக்க தடயங்களை அழிக்க கையாளப்படும் புராதன யுக்தி. அப்படிச் சிலர் ஆடும் ஆட்டத்தில் பரிதாபமாக சிக்கி உயிர்விட்டவர்களையும் அவர்கள் குடும்பத்தையும் வன்மம் கொண்டு தாக்குபவர்கள் தங்கள் விளக்குகளை சூத்திரதாரிகள் பக்கம் மறந்தும் திருப்ப மாட்டார்கள்.

Thalapathy Bharani

கமல் கட்சியில் நான் உறுப்பினராக சேர்ந்ததாக இ-மெயில் வந்துள்ளது - தமிழிசை

சிஸ்டம் சரியில்ல மேடம். சிஸ்டம் சரி செய்பவர் இமயமலை சென்றுள்ளார். பின்னர் தொடர்புகொள்வோம்

Vadivel Paramasivam

ஆமா தம்பி நீங்க எந்த பொறுப்புல இருக்கீங்க?

என் வீடு அமைந்திருக்கும் வீதியில் 12 ஆம் கதவு எண் கொண்ட வீட்டின் அனைத்து பிரிவுகளுக்குமான கழகத்தின் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறேன்!!!

Spp Bhaskaran

விடீயோகான் அதிபர் வங்கிக்கடன் வாங்கி வெளிநாட்டுக்கு சென்று விட்டார் என்ற ஒரு தகவல் படித்தேன்.

இது நிஜமா?

வீடியோகான் டி.டி.எச். சந்தா பணம் நம்பி செலுத்தலாமா?

Prabakaran Vaithe

குற்றப்பின்னணி கொண்ட யாரும் அதிமுகவில் இல்லை ஜெயக்குமார்

ஜெ' வை மறைமுகமாக சொல்றாரு

SHIVA SWAMY.P

தீர்ந்துவிடுவோம் என்று தெரிந்தும்,பிறருக்காக தயக்கமின்றி ஊர்ந்துகொண்டே செல்கிறது...பேனா

எழில்விழி

பிச்சைக்காரன் என்றாலும் உன்னை வணங்கினால் நீயும் அவனை வணங்கு...

மனசிருந்தால் காசு போடு

இல்லை என்றால் ஒரு புன்னகை சிந்து, பூரித்துப் போவான்..

ஸ்ரீ

இந்த 'World tour'ல எது சரி எது தப்புன்னு நாம தெரிஞ்சிக்கறதுக்கு முன்னாடியே 'Tour'ஐ முடிச்சி நம்மல மேல கூட்டிட்டு போயிடறான் கடவுள்!

இந்த உலகத்துலயே மோசமான 'Tourist Guide' யாருன்னா அது இந்த கடவுள் தான்.

அ(ட)ப்பாவி™

தனிமை "நிகழ்காலத்தை" தின்று தீர்க்கிறது..!!!

நினைவோ "எதிர்காலத்தை" தின்று தீர்க்கிறது..!!!

மனமோ "இறந்தகாலத்தை" கொன்று துடிக்கிறது..!!!

கோழியின் கிறுக்கல்!!

ஆதார் கார்டுல இருக்கிறது நான்தான்னு நிருபிக்க,

'ஆதாரம்' கேட்கிறான்!!!

சித்ரா தேவி

மனைவிகள் கவனத்திற்கு : நீங்கள் பின்னால் உட்கார்ந்திருக்கும்போது உங்க கணவர் போலீஸ் இல்லாத பாதையை விட்டுட்டு போலீஸ் இருக்கற ரோடா தேடி போனாருன்னா வேற ஏதோ ஒன்றை எதிர்பார்க்கிறார் என்று அறிக.

சிதறல்கள்

சிறையில் சசிகலாவுக்கு தினக்கூலி ரூபாய் 30

வாழ்க்கை வட்டமோ கட்டமோ இல்லை ரொம்ப கஷ்டம்

அன்புடன் கதிர்

தொடு திரையாய் வளர்ந்த விஞ்ஞானம்

ஏழைகளுக்கு எட்டாகணி

என்பதே விஞ்ஞானத்தின் வீழ்ச்சி !!!

கொண்டல் சாமி

பெரியார் கடவுள் இல்லை என்று தானே சொன்னார் இந்து கடவுள் மட்டும் இல்லையென்று எங்கேயும் சொல்லவில்லையே ? அப்படியிருக்கும் போது நீங்கள் இந்துமதத்தை எதிர்க்கிற அளவுக்கு மற்ற மதத்தவரை எதிர்ப்பதில்லையே ஏன்னென்று பெரியார்வாதிகளை நோக்கி பல ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.

இதில் உண்மையிருக்கிறது ஆம் நான் இந்துமதத்தை கூடுதலாக எதிர்க்கிறேன் தான் ஏன்னென்றால் நான் இஸ்லாமியர் இல்லை கிருத்தவர் இல்லை என்று சொன்னேன். அவர்களும் சரியென்று என்னை விட்டுவிட்டார்கள். ஆனால் நான் இந்து இல்லையென்று வரலாற்று வழிப்பட்ட உண்மையை சொல்லிக்கொண்டே இருக்கிறேன். ஆனால் நீ என்னை விட்டபாடில்லை. என்னை இன்றளவும் இந்து என்றுதான் சொல்லிக்கொண்டு இருக்கிறாய் இதை சட்டத்தின் வழியாக வேறு நிறுவி வைத்திருக்கிறாய்.

ஆம் யாரெல்லாம் கிருத்தவன் இல்லையோ யாரெல்லாம் முகமதியர் இல்லையோ யாரெல்லாம் பார்சி இல்லையோ அவர்களெல்லாம் இந்து என்று உங்கள் சட்டம் தானே சொல்கிறது. அப்படியிருக்கும் போது நான் நாத்திகன் ஆனாலும் நான் இந்து என்று வரையறுத்துவிட்டீர்கள். இந்து என்றால் நான் சூத்திரன் என்றும் சொல்லி வைத்துவிட்டீர்கள்.

சூத்திரனென்றால் இழிவான வழியில் பிறந்தவனென்று உங்கள் மனுநீதி சொல்லுகிறது. அப்படியிருக்கும் போது என்னை இழிவானவன் என்று சொல்லும் உன்னை எதிர்க்காமல் வேறு யாரை நான் எதிர்ப்பது?

ஆகவே உன் மதம் மீதான என் எதிர்ப்பு என்பது என்னை விட்டுவிடும்வரை தொடரும்.....

-லாக் ஆஃப்.

செவ்வாய், 13 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon