மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 மா 2018

பாகிஸ்தானுக்குத் தேயிலை ஏற்றுமதி உயர்வு!

பாகிஸ்தானுக்குத் தேயிலை ஏற்றுமதி உயர்வு!

நடப்பு 2017-18 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான 10 மாதங்களில் இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் நாட்டுக்கு மொத்தம் 12.73 மில்லியன் கிலோ அளவிலான தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் தேயிலை ஏற்றுமதி 9.65 மில்லியன் கிலோவாக மட்டுமே இருந்தது எனத் தேயிலை வாரியம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் ஒட்டுமொத்த தேயிலை ஏற்றுமதியை எடுத்துக்கொண்டால், ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 200.67 மில்லியன் கிலோ அளவிலான தேயிலையை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. மதிப்பு அடிப்படையில் மொத்தம் ரூ.3,970 கோடி மதிப்பிலான தேயிலை இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. 2016-17 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ரூ.3,874 கோடிக்கு மட்டுமே தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தது.

அதிகபட்சமாக இந்தியாவிலிருந்து ஈரான் நாட்டுக்கு மொத்தம் 24.62 மில்லியன் கிலோ அளவிலான தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. சென்ற ஆண்டில் இந்த அளவு 21.06 மில்லியன் கிலோவாக இருந்தது. ஈரானைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு 16.44 மில்லியன் கிலோ, இங்கிலாந்துக்கு 13.66 மில்லியன் கிலோ, அமெரிக்காவுக்கு 11.89 மில்லியன் கிலோ என்ற அளவில் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகத் தேயிலை வாரியம் தெரிவித்துள்ளது.

செவ்வாய், 13 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon