மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 மா 2018

அதிதிக்கு சந்தோஷ் சிவன் கொடுக்கும் பரிசு!

அதிதிக்கு சந்தோஷ் சிவன் கொடுக்கும் பரிசு!

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘செக்க சிவந்த வானம்’ படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார் நடிகை அதிதி ராவ்.

காற்று வெளியிடை படத்திற்குப் பிறகு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் படம் 'செக்க சிவந்த வானம்'. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய், அரவிந்த் சாமி, ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.சமூகத்தில் தொழிற்சாலைகளில் ஏற்படும் பிரச்சினையை மையமாக வைத்து உருவாகிவரும் இதன் படப்பிடிப்பு சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மும்முரமாக நடைபெற்றுவருகிறது.

இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் நிலையில், இப்படம் சம்பந்தமான புகைப்படங்களை ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் வெளியிட்டு படத்திற்கான எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்துகிறார். நடிகர்கள் சிம்பு, அரவிந்த் சாமி, அருண் விஜய் ஆகியோர் படத்தில் இணைந்து நடித்து வரும் புகைப்படங்களை வெளியிட்ட சந்தோஷ் சிவன் அடுத்ததாக அதிதியும் படப்பிடிப்பில் இணைந்து விட்டார் என்பதை தெரிவிக்கும் விதமாகப் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அதிதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார். இந்தப் புகைப்படத்தை அதிதி தனது ட்விட்டர் பக்கத்தில் ரீட்விட் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்.

மணிரத்னத்தின் ரோஜா படத்தில் தொடங்கிய ஏ.ஆர். ரஹ்மான்-வைரமுத்து கூட்டணி, செக்க சிவந்த வானம் படத்திலும் தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 13 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon