மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 மா 2018

வீடு விற்பனை அதிகரிப்பு!

வீடு விற்பனை அதிகரிப்பு!

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில் இந்தியாவில் வீடு விற்பனை 29.3 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆய்வு நிறுவனமான இக்ரா, இந்தியாவின் வீடு விற்பனையில் ஈடுபடும் 11 ரியல் எஸ்டேட் நிறுவனங்களிடையே ஆய்வு மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ’2017-18 நிதியாண்டின் ஏப்ரல் - டிசம்பர் காலகட்டத்தில் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மொத்தம் 17.26 மில்லியன் சதுர அடி அளவிலான வீடுகளை விற்பனை செய்துள்ளன. இது 2016-17 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் விற்பனையாகியிருந்த 13.35 மில்லியன் சதுர அடி அளவிலான வீடுகளை விட 29.3 சதவிகிதம் அதிகமாகும். அதேபோல, முன்பதிவு செய்யப்பட்ட வீடுகளுக்கான பரப்பளவின் மதிப்பு ரூ.11,651 கோடியாக உயர்ந்துள்ளது. இது சென்ற நிதியாண்டில் ரூ.9,205 கோடியாக இருந்தது’ என்று கூறப்பட்டுள்ளது.

வீடு விற்பனைக்கான தொகையை வசூலிப்பதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ரியல் எஸ்டேட் சட்டம் கடுமையாக்கப்பட்டதால் வீடு விற்பனைக்கான வசூல் இந்த நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் ரூ.9,456 கோடியாகவே இருந்துள்ளது. இதற்கு முந்தைய நிதியாண்டில் இந்த மதிப்பு ரூ.9,735 கோடியாக இருந்தது. மேலும், புதிதாகத் தொடங்கப்பட்ட வீடுகளின் பரப்பளவு 10.8 மில்லியன் சதுர அடியாக உள்ளது. இதற்கு முன்னர் இந்த அளவு 18.7 மில்லியன் சதுர அடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 13 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon