மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 மா 2018

வரலட்சுமி-ஆர்.கே.சுரேஷ்: ‘தாரை தப்பட்டை’ கூட்டணி?

வரலட்சுமி-ஆர்.கே.சுரேஷ்: ‘தாரை தப்பட்டை’ கூட்டணி?

பாலாவின் தாரை தப்பட்டை படத்தில் நடிகை வரலட்சுமியின் கணவராக நடித்த ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாக நடிக்கவிருக்கும் அடுத்த படத்தில் வரலட்சுமி நாயகியாக ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

சலீம், தர்மதுரை, அட்டு போன்ற படங்களை தயாரித்த தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ், தாரை தப்பட்டை படத்தின் வில்லனாக தமிழ் சினிமாவுலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து நாயகனாக பில்லா பாண்டி, வேட்டை நாய் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் 'அட்டு' இயக்குநர் ரத்தன் லிங்கா இயக்கவுள்ள புதிய படத்தின் நாயகனாக ஆர்.கே.சுரேஷ் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்திற்கு டைசன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை ஆர்.கே.சுரேஷ் தனது ஸ்டூடியோ 9 நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். 'அஃது' படத்தின் கதாநாயகன் அஜய் இதில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். தெலுங்கில் வெளியாகி வரவேற்பை பெற்ற 'நெப்போலியன்' படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாக உள்ளது. 'தாரை தப்பட்டை' படத்திற்கு பிறகு ஆர்.கே.சுரேஷ் ஜோடியாக வரலட்சுமி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் பணிபுரியவுள்ள நடிகர் நடிகைகள் குறித்த அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செவ்வாய், 13 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon